தண்ணீர் டப்பாவில் இருந்து இந்த இரு பொடியர்களும் செய்யுற அலப்பறைய பாருங்க… கோடி ரூபாய் கொடுத்தாலும் இவர்களின் மகிழ்ச்சியை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது..!

water-bucket-child-cute-fun-reaction

குழந்தைகள் மகிழ்ச்சியாய் இருக்க காரணம் தேவையில்லை சூழல்களை மகிழ்ச்சியாய் ஏற்று கொள்ளும் மனோபாவம் இவர்களுக்கு உண்டு. சந்தோசமாக இருக்க பெரிய பங்களாவோ, காரோ, நீச்சல் குளமோ, பண மூட்டையோ தேவையில்லை. மனிதர்கள் என்றுமே வளர்ந்த பிறகு குழந்தையாகவே இருந்திருக்க மாட்டோமா என்று ஏங்கும் தருணங்கள் அமையும். அப்பழுக்கின்றி வெள்ளை மனம், கொள்ளை இன்பம் என்று வாழும் குழந்தைகளின் உலகமே வேறு.

சிறு வயதில் குழந்தைகள் செய்யும் வேடிக்கை, விளையாட்டுகளை நினைவில் வைத்திருப்பார்கள் பெற்றோர்கள். அவர்கள் பெரியவர்களாக வளர்ந்த பிறகு….. பெற்றோர்கள் அவர்கள் சிறு வயதில் செய்த குறும்புத்தனங்களை கூறி மகிழ்வார்கள். 90-ஸ் காலத்தில் அவர்களின் புகைப்படங்கள்…. நாற்காலியில் உட்கார்ந்தவாரோ அல்லது குப்புற படுத்து தவழ்வது போன்றோ இருக்கும் புகைப்படங்கள் இல்லாத வீடுகளை காண்பது அரிது. அவர்களின் புகைப்டங்களை வீட்டில் வரவேற்பறையில், அல்லது தொலைக்காட்சி பெட்டியின் மீது வைத்து அழகு பார்ப்பார்கள் பெற்றோர்கள்.

2கே-காலத்தில் குழந்தைகள் செய்யும் லீலைகளையும், அவர்களின் யதார்த்தமான பேச்சுக்களையும் நாம் இணையத்தில் அன்றாடம் பார்த்து மகிழலாம். குழந்தைகள் செய்யும் குறும்புகளை வீடியோவாக எடுத்து அதை இணையத்தில் பதிவிடுவது வழக்கமாகி போனது. 90ஸ்-கள் சிறுவர் மலரில் மட்டுமே இடம் பிடித்த காலம் மலைஏறி போய் இன்று உலகம் முழுவதும் அவர்களின் இம்சைகள், வேடிக்கைகள், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காணொலிகளை நாடு விட்டு நாடு தாண்டி கண்டம் விட்டு கண்டம் சென்று வைரல் ஆகி வருகிறது. இங்கும் இரட்டை குழந்தைகள் வாளிக்குள் அமர்ந்து கொண்டு தண்ணீரில் அடித்து விளையாடும் லூட்டிகள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இவர்களின் மகிழ்ச்சிக்கு வானத்து தேவதையும் வந்து விளையாடும்……அந்த காணொலி காட்சியை இங்கே காணலாம்….

You may have missed