வெற்றிலை சாப்பிட்டே உடல் எடையை குறைக்கலாம் தெரியுமா?
அடடே இப்படிக்கூட வழி இருக்கா? இதுதெரியாமப் போச்சே!..

vetrillai_weight_loss_tips_nzzzzz

      இன்று பலரும் பெரும் தொப்பையுடன் உலாவுவதை பார்த்திருக்கிறோம். முன்பெல்லாம் தொப்பையுடன் இருப்பவர்கள் குறைவாகவே இருந்தார்கள். ஆனால் இப்போது வாகனங்களின் அதீத பெருக்கம், நீண்டநேரம் உட்கார்ந்தே இருந்து வேலைபார்ப்பது, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது ஆகியவற்றால் பலருக்கும் தொப்பை வந்து விட்டது.

  தொப்பையினால் இதயநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள்கூட இருக்கிறது.தொப்பையை யாரும் விரும்பி வைத்துக் கொள்வது இல்லை. எல்லாருமே தொப்பையை வேண்டாம் என்றே கருதுகிறார்கள். ஆனால் அவர்களையும் மீறி தொப்பை வந்துவிடுகிறது. ஆனாலும் பலரும் தொப்பையைக் குறைக்க பலவகையான யுத்திகளைக் கடைப்பிடிப்பார்கள்.

  சிலர் உணவுக்கட்டுப்பாடு தொடங்கி, ஜிம்முக்குப் போய் ஜம்மென ஒர்க் அவுட் செய்வது வரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு யுத்தியைக் கடைப்பிடிப்பார்கள். ஆனால் வெற்றிலை சாப்பிட்டே உடல் எடையைக் குறைக்கலாம் என்றால் ஆச்சர்யம் தானே? வாருங்கள் இந்தப் பதிவில் அது எப்படி எனப் பார்ப்போம்.

 வெற்றி மருத்துவ குணங்கள் நிறைந்தது. நாம் பாக்கு குறைவாகபும், சுண்ணாம்பு கொஞ்சம் கூடுதலாகவும் சேர்த்து வெற்றிலை சாப்பிட்டு வந்தால் பசி இல்லாதவர்களுக்கும் பசி எடுக்கும்.இதேபோல் அன்றாடம் காலையில் வெறும் வயிற்றில் கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சேர்த்து தொடர்ந்து 8 வாரங்கள் சாப்பிட்டால் உடல் எடையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும். இதேபோல் வயிற்றுப்புண், வாயில் புண், வாயில் இருந்து வாடை போன்ற பிரச்சினை இருப்பவர்கள் சாயங்கால நேரங்களில் பாக்கு, சுண்ணாம்பைக் குறைவாக வைத்து வெற்றிலை போட்டால் இந்தப் பிரச்சினைகள் போய்விடும்.

  குழந்தைகளுக்கு சளி, இருமலைப் போக்கவும் வெற்றிலை கொடுக்கலாம். அதாவது ஒரு வெற்றிலையில் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து கொஞ்சம் கசக்கிப் பிழிந்து சாறைக் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். வெற்றிலை சாப்பிட்டாலே வாயில் எச்சில் ஊறுதல் அதிகரிக்கும். இதனால் செரிமானம் சீராகும். இந்தத் தன்மைகளினால் உடல் எடையும் குறையும். 

You may have missed