இருபதே நொடியில் வாழ்க்கை பாடத்தை போதித்த எறும்பு… உங்க வாழ்க்கையிலும் இப்படி நடந்திருக்கா பாருங்க…!

      மனிதர்கள் நாம் பள்ளி, கல்லூரி அசெம்பிளி காலத்தில் ஒன்றன் பின் ஒருவராக நின்றிருப்போம். சுதந்திர தின அணிவகுப்பின் போதும் ராணுவவீரர்கள், போலீஸார் ஆகியோர் அப்படி ஊர்வலமாக செல்வார்கள். ஆனால் எப்போதுமே எறும்புகள் அப்படி வரிசையாகச் செல்வதைப் பார்த்திருப்போம். அது ஏன் தெரியுமா?

         அதாவது எறும்புகள் தங்களுக்குள் தகவல் பரிமாற்றங்களை பெரமோன்கள் மூலம் கடத்துகின்றன. முன்பாக செல்லும் எறும்பு பெரமோன்கள் வழியே கூறவரும் செய்தியை, பின்னால் வரும் எறும்பு புரிந்துகொண்டு அதன்படியே செய்கிறது. எறும்புகளுக்கு இந்த பெரமோன் சுரப்பிகள் உள்ளது. மனிதர்களுக்கு ஹார்மோன் சுரப்பி சுரப்பதுபோல் எறும்புகளுக்கு இந்த பெரமோன் சுரப்பிகள் சுரக்கின்றன. இந்த சுரப்பியின் மூலம் தான் எறும்புகள் தங்களுக்கு பின்னால் வரும் எறும்புகளுக்கு தகவல் பரிமாற்றத்தைக் கடத்துகின்றன.

  அப்படித்தான் இங்கும் ஒரு வீட்டில் எறும்புகள் வரிசையாக சென்று கொண்டிருந்தன. இடையில் கொஞ்ச இடம் காலியாக இருந்தது. அப்போது சுவற்றின் ஒரு பகுதியில் இருந்து, மற்றொரு பகுதிக்கு எறும்புகள் தங்களுக்குள் கைகளை இணைத்து அரண் போல் அமைத்து சில எறும்புகளைக் கடத்துகின்றன. அதாவது சுவற்றின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு கடத்துகின்றன. ஆனால் அத்தனை வேறுக்கும் தன் முதுகைக் கொடுத்து, பாலமாக அமைந்து கடப்பதற்கு கடைசியில் வந்த எறும்பே தியாக உணர்வோடு துணைநின்றது. ஆனால் அந்த எறும்பு எப்படி அந்த இடத்தைக் கடந்துவரும் என்பதைப் பற்றி மற்ற எறும்புகள் யோசிக்கவே இல்லை. 

   மனிதர்கள் எப்படி தங்களுக்கு உதவுபவர்களை மறந்துவிடுகிறார்களோ, அப்படித்தான் இந்த எறும்பையும், சக எறும்புகள் மறந்துவிட்டன என நெட்டிசன்கள் இதைச் சோகத்தோடு பகிர்ந்து வருகின்றனர்.