இந்த இயற்கையின் அதிசயத்தை பாருங்க… தென்றல் காற்று இசையமைக்க இந்த மரம் ஆடிய அழகிய நடனத்தை பாருங்க..!


இயற்கை தன்னுளே அதிசயத்தையும், ஆச்சர்யத்தையும் வைத்துள்ளது. மன அழுத்தத்தில் இருக்கும் போதும், கவலையாக இருக்கும் போதும் இயற்கையை தரிசனம் செய்தால் மனது லேசாகி விடும்.

அழகான மலைகள், பூந்தோட்டங்கள், அருவிகள், நீல வானம், பஞ்சு போன்ற மேகங்கள், பறவைகள் அணி வகுத்து பறந்து செல்லும் காட்சிகள், தென்றல் தவழ்ந்து விளையாடும் வயல் வெளிகள், சுனைகள், கரையை அலைகள் தொட்டு செல்லும் கடல்கள், வானத்தில் மின்னும் நட்சத்திரங்கள், அழகிய முழு நிலவு, மழை நேரத்தை அறிவிக்கும் வானவில், நீண்ட நெடிய மரங்களை கொண்ட காடுகள் போன்ற எண்ணிலடங்கா இயற்கை காட்சிகள் இந்த உலகில் காண கிடைக்கிறது.

சில நேரங்களில் நமக்கு ஆறுதல் தரும் அன்னையாக விளங்கும் இயற்கை சில சமயங்களில் கோபம் கொள்ளும் போது அதை கட்டுப்படுத்த இயலாத நிலை உருவாகி தாண்டவம் ஆடி விடும். கண்களையும், மனதையும் கொள்ளை கொள்வது போல் மனிதர்களை புயலாலும், பெரும்மழையாலும், சுனாமியாலும் படாத பாடு படுத்திவிடும். இங்கே காணொலியில் தென்றல் போல் வீசும் காற்றில் மரம் ஓன்று மான்ஸ்டர் போல் உன்னை ஒரு வழி பண்டிடுறேன் பார் என்பது போல் ஆட்டம் ஆடுகிறது. அந்த காணொலியை இங்கே பார்வையிடலாம்……