தப்பாட்டம் அடித்து செம ஆட்டம் போட்ட கல்லூரி மாணவிகள்.. பாரம்பர்ய உடையில் என்ன ஆட்டம் பாருங்க….!
முன்பெல்லாம் முறைப்படி நடனம் கற்றவர்கள் மட்டுமே ஆடி வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் சாதாரணமாகவே பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் பள்ளி, கல்லூரி விழாக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அங்கு ஆட்டம், பாட்டத்துக்கு குறையே இருக்காது.
இளம்பெண்களின் நடனமாடும் ஆசையின் தொட்டக்கப்புள்ளியாக ஷெரிலை சொல்லலாம். ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு கேரளத்தின் ஷெரில் ஆடிய நடனம் வேற லெவலில் ஹிட் ஆனது. அதன்பின்னர் தொடர்ந்து பலரும் அதேபோல் ஆடத் தொடங்கினர். அவற்றில் சில வைரலும் ஆனது. கல்லூரி விழாக்களிலும் மாணவிகள் மேடை ஏறி பட்டையை கிளப்புகின்றனர்.
இங்கும் அப்படித்தான் ஒரு கல்லூரியில் ஆண்டு விழா நடந்தது. இதில் பாரம்பர்யமான சேலை கட்டி, கல்லூரி மாணவிகள் கல்லூரி வளாகத்தில் நின்று கொண்டு செம நடனம் போட்டனர். அதிலும் பாரம்பர்ய இசைக்கருவியான தப்பாட்டம் போட்டு கொலுசு கடை ஓரத்திலே பாடலுக்கு செம மாஸாக ஆட்டம் போட்டனர். இதோ நீங்களே அவர்களின் இந்த க்யூட்டான ஆட்டத்தைப் பாருங்களேன்.