அப்பவே நம்ம போஸ் பாண்டி தனது ஜோடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமா..? நடிகர் சிவகார்த்திகேயனின் சிறு வயது புகைப்படத்தை பார்த்து வியந்த இணையவாசிகள்….

sivakarthikeyan-his-wife-childhood-photo-trends

நடிகர் சிவகாத்திகேயன் பன்முக திறமை கொண்ட நடிகர் மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட், அங்கேர், சிங்கர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர். இவர் பெரியத்திரைக்கு வருவதற்கு முன்னர் விஜய் தொலைக்காட்சியில் மிமிக்கிரி பங்கேற்பாளராக கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் விஜய் தொலைக்காட்சியில் நுழைந்தார். அந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன், அது இது எது, பாய்ஸ் Vs கேர்ள்ஸ், ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் அவர் அரங்கேற்றிய நகைச்சுவை கலந்த கருத்துக்கள் மக்களிடம் மிகவும் வரவேற்பை பெற்றது. ஜோடி நம்பர் ஒன் , ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் இவர் பேசிய காட்சிகளை புளூபெர்ஸ் என்ற பெயரில் விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. தற்போது யூ-டூப்பிலும் அந்த குறிப்பிட்ட பகுதிகள் காணக்கிடக்கிறது…..அதனை இன்றும் மக்கள் விரும்பி பார்க்கின்றனர். கோடிகண்ணகில் பார்வையாளர்கள் இன்றும் பார்த்து ரசித்து வருவது குறிப்பிடத்தக்கது…..

தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் அவரது நகைச்சுவை திறமையால் மக்களின் மனங்களில் எங்கள் வீட்டு பிள்ளையாகவே இடம் பிடித்திருந்தார்……இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் , திருவீழிமிழிசை ஆகும். இவரது தந்தை சிறை துறை கண்காளிப்பாராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது தாத்தா பத்மஸ்ரீ நாதஸ்வர வித்துவான். இவர் தன் பள்ளிப்படிப்பை காம்பியன் ஆங்கிலோ இந்தியன் ஆண்கள் மேல் நிலை பள்ளியில் படிப்பை முடித்துள்ளார், மேலும் திருச்சியில் உள்ள ஜே.ஜே இன்ஜினியரிங்க் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ளார் மேலும் MBA படிப்பையும் படித்து முடித்துள்ளார்.

தனது பங்களிப்பின் மூலம் விஜய் டிவியின் செல்ல பிள்ளையாகவும், எங்கள் வீட்டு பிள்ளையாகவும் கொண்டாடப்பட்டார். அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளுக்கு பெஸ்ட் ஆங்கேர் அவார்ட் விகடனால் வழங்கப்பட்டது.

பெரிய திரைக்கு வருவதற்கு முன்பே தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார். 2012-ம் ஆண்டில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா திரைப்படத்தில் தனது பயணத்தை துவக்கினார்…..

பின்னர் நடிகர் தனுசுடன் மூன்று திரைப்படத்திலும், மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்த படாத வாலிபர் சங்கம் என அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து மக்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இளைய தளபதி விஜய் ஒரு அவார்ட் நிகழ்ச்சியின் போது குழந்தைகளின் மனதை பிடித்துள்ளார் என சிவகார்த்திகேயனை புகழ்ந்தார். தற்போது அவர் அயலான், மாவீரன் மற்றும் உலக நாயகன் கமல் அவர்களின் தயாரிப்பில் sk 21 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவருடைய சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரல் ஆக வருக்கிறது அதில் அவருடைய மனைவி ஆர்த்தியினுடைய புகைப்படமும் உள்ளதால்…….சிறு வயதிலேயே மனைவியுடன் எடுத்து கொண்ட குடும்ப புகைப்படம் என இணையவாசிகள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்….அந்த புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

You may have missed