பிரபல பாடகர் ஸ்ரீநிவாசின் மகளா இவங்க…?ஹீரோயின் மாதிரி எவ்ளவு க்யூட்டா இருகாங்க பாருங்க…!

singer-srinivas-daughter-pic-news

தெனாலி படத்தில் வரும் ஆலங்கட்டி மழை…..பாடலை பாடிய சிறு குழந்தையா இவங்க……என்று ரசிகர்கள் கொண்டாடும் பாடகி சரண்யா ஸ்ரீனிவாஸ். இவர் பிரபல பின்னனி பாடகர் ஸ்ரீநிவாஸ் அவர்களின் மகள்.

பின்னனி பாடகர் ஸ்ரீநிவாஸ் அவர்கள் நம்மவர் படத்தில் இடம்பெற்ற சுத்தம் என்பது நமக்கு…… என்ற பாடல் மூலம் மக்கள் மனதினில் இடம் பிடித்தார். அம்பா சமுத்திரத்தில் பிறந்த இவர் பின்னர் திருவனந்தபுறத்தில் பள்ளி படிப்பை முடித்தார். மேற்கொண்டு உயர் கல்வி கற்க மும்பை சென்று வேதியல் இன்ஜினீரிங்க் பிரிவில் பி.டெக் முடித்தார். அந்த துறையில் பத்தாண்டுகள் பணி புரிந்த பின்னர், பாடகராக வர வேண்டும் என்ற குறிக்கோளில் சென்னையில் குடியேறினார்.

பாடகராக மக்களிடத்தில் அவரை பிரபலபடுத்திய பாடல் மின்சார கனவு படத்தில் பாடிய மானாமதுரை மாமர கிளையிலே……பச்சை கிளி ஒன்னு…..என்ற பாடல் இவரை பட்டி தொட்டி எங்கும் அறிமுகப்படுத்தியது. உயிரே படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவர் பாடிய என்னுயிரே…….பாடலும், தைய……..தையா……பாடலும் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்றவை. படையப்பா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நீலாம்பரிக்கு நடக்கும் பாட்டு மற்றும் நடன போட்டியில் வரும் மின்சார பூவே…..பாடலும் இன்றும் கேட்க தூண்டும் பாடல்கள் ஆகும்.

ஏய் நீ ரெம்ப அழகா இருக்க படத்தில் இடம் பெற்ற இனி நானும் நானில்லை…… பாடல் 2கே-கிட்ஸ்களுக்கும் பிடித்தமான பாடலாகும். இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் 90-ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.

சூப்பர் சிங்கர்- விஜய் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து பங்கேற்பாளர்களுக்கு கருத்துக்கள் மற்றும் அறிவுரை கூறி பங்கேற்பாளர்களுக்கு உந்து சக்தியாக இருந்துள்ளார். தற்போது ஜி-தமிழ் தொலைக்காட்சியில் ‘சரிகம’ சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். அவருடைய மகள் சரண்யா ஸ்ரீனிவாஸ் தற்போது சினிமாவில் பின்னனி பாடகராக வலம் வருகிறார். அவருடைய புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படங்களை இங்கே காணலாம்…….

pic1

pic2

You may have missed