நிறைமாத வயிற்றுடன் போட்டோ சூட் நடத்திய சந்திரலேகா சீரியல் நடிகை.. வாழ்த்தும் ரசிகர்கள்..!


தமிழ் சின்னத்திரை நட்சத்திரங்களில் ஒருவர் ஸ்வேதா பாண்டேகர்.இவர் சென்னையில் உள்ள எம்ஜிஆர் இன்ஜினியரிங் காலேஜில் பட்டம் பெற்றவர்.ஆரம்ப கட்ட காலங்களில் இவர் விளம்பரப் படங்களில் அதிகம் நடித்து வந்தார்.அதன் பின் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த இவர் சிறிய சிறிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.

ஆழ்வார் படத்தில் அஜித்தின் தங்கையாகவும் நடித்தார்.2008 ஆம் ஆண்டு வெளியான வள்ளுவன் வாசுகி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.அப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாததால் அதற்குப் பின் அவருக்கு வாய்ப்புகள் குறைந்து போயின. இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் ஒரு சில தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். கடைசியாக ஜெயம் ரவியின் நடித்த பூலோகம் படத்திலும் சிறிய கேரக்டரில் வந்து செல்வார்.

அதன்பின் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த இவர் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சந்திரலேகா நிலா போன்ற சீரியல்களில் கலக்கி பிரபலமானார். இவர் பாலமுருகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.அதன்பின் தற்போது ஃபோட்டோ ஷூட் ஒன்றையும் நடத்தியுள்ளார் அதில் நிறைமாத கற்பனையாக மிகவும் அழகாக போட்டோ ஷூட் எடுத்துள்ளார்.தற்போது அந்த புகைப்படங்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது மேலும் அவருக்கு ரசிகர் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். புகைப்பட இணைப்பு கீழே…
pic1

pic2

pic3
