இந்தக் குட்டிக்குழந்தை யாருன்னு தெரியுமா? இப்போ தென்னிந்தியாவையே கலக்கி வரும் பிரபல நடிகை..!


இணையத்தில் ஒரு குட்டிக்குழந்தையின் புகைப்படம் செம வைரல் ஆகிவருகிறது. அந்தக் குழந்தை வேறு யாரும் இல்லை. இப்போது தென்னிந்தியாவையே கலக்கும் பிரபல நடிகை. அது யார் என்று தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

பொதுவாகவே பிரபலங்களை சிறுவயது புகைப்படங்களாகப் பார்ப்பதே அலாதி சுகமானது. அதனால் தான் சின்ன வயது புகைப்படமாக பிரபலங்களைப் பார்க்கும்போது அந்த படங்கள் வைரலும் ஆகிவிடுகிறது. தமிழ் சினிமாவில் பிறமொழியில் இருந்து வந்து, பெரிய ரவுண்ட் வந்த பலர் உண்டு. அவர்களில் ராஷ்மிகாவும் ஒருவர். ராஷ்மிகா மந்தனா மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். ‘கிர்கி பார்ட்டி’ என்னும் கன்னட படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார்.

கீதா கோவிந்தம் என்னும் படம் ராஷ்மிகாவை வேற லெவலில் ஹிட் ஆக்கியது. கார்த்தியுடன் இவர் நடித்த சுல்தான் படமும் மெகா ஹிட்டானது இவர் அல்லு அர்ஜூனுடன் இவர் நடித்த புஷ்பா படம் தென்னிந்திய மொழிகள் அத்தனையிலும் இவரைக் கொண்டு சேர்த்தது. இப்போது தளபதி விஜயுடன் வாரிசு படத்திலும் ஹீரோயினாக நடித்தார். நடிகை ராஷ்மிகாவின் குழந்தைப் பருவ புகைப்படம் தான் இது! இதைப் பார்த்த நெட்டிசன்கள் இதை ஆச்சர்யத்தோடு பகிர்ந்து வருகின்றனர்.
