90ஸ் கிட்ஸ்க்கு பிடித்த தொகுப்பாளினி என்னவானார் தெரியுமா..? தற்போது எப்படி இருக்கிறார் பாருங்கள் ..!


பெப்ஸி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை பார்க்காத 90ஸ் கிட்ஸ்களே இருக்க முடியாது. அந்த நிகழ்ச்சியை அழகாக தொகுத்து வழங்கும் உமாவுக்காகவே அதைப் பார்த்தவர்கள் அதிகம்.
பல டிவி சீரியல் வாய்ப்பும், ஹீரோயின் வாய்ப்பும் கூட தேடி வந்தபோதும் அந்த நிகழ்ச்சியை மட்டுமே நடத்திக் கொண்டிருந்தார் பெப்ஸி உமா.

தீனா படத்தில் அஜித்குமாரிடம் பெப்ஸி உமா பேசுவது போல் நடித்து லைலா கலாய்ப்பார். அந்த அளவுக்கு பெப்ஸி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சி தமிழர்களின் நாடி, நரம்போடு இரண்டறக் கலந்த நிகழ்ச்சியாகும்.
சினிமா நடிகைகளை மிஞ்சும் அழகு, செம அழகான வண்ண, வண்ணப்புடவை, என வசீகரிக்கும் பெப்சி உமாவை இப்போதும் கூட நடிக்க வைக்க பலரும் முயற்சித்து வருகின்றனர். ஆனால் அவர் சிக்கவே இல்லை.

இப்போது பெப்சி உமா, ஒரு பிரபலமான தனியார் கம்பெனியில் இயக்குனராக வேலை செய்து வருகின்றார்.