இந்த டீச்சர் கிட்ட கொஞ்சம் கவனமாக தான் இருக்கோணும்.. என்ன அழகாக சிலம்பம் சுத்துறாங்க பாருங்க..

80-ஸ் மற்றும் 90-ஸ் காலகட்டங்களில் வெளிவந்த படங்களில் சண்டை காட்சிகள் வந்தால் நிச்சயம் சிலம்பம் இல்லாத சண்டை காட்சிகளே இருக்காது…..விறு விறுப்பாக நகரும் கதைக்களத்தில் சண்டை காட்சிகள் வரும் போது கதாநாயகன் எதிரிகளிடம் அடி வாங்கி கொண்டே இருப்பார்… ஒரு கட்டத்தில் அவருக்கு வீரம் பொங்கி பெருக்கெடுத்து குச்சியை கண்டுபிடித்து கையால் சுழற்றி சுழற்றி அடி பின்னியெடுத்து விடுவார். அப்போது தான் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு உந்து சக்தி பிறக்கும். குச்சியை வைத்தே எதிரிகளை ஓட ஓட விரட்டி அடித்து விட்டார் என்று பெருமூச்சு விட்டு ஆசுவாசப்படுவார்கள்….

90-ஸ் கிட்ஸ்கள் கிடைக்கும் குச்சிகளை கொண்டு நண்பர்களுடன் சிலம்பம் சுற்றுவது வழக்கம்….சிலம்பத்தை முறையாக கற்று கொண்டவர்கள் சிலம்பத்தை சுழற்றும் போது வேகம் மற்றும் அதன் படிநிலைகள் மாறுபடும். தமிழர்களின் வீர விளையாட்டாக இருக்கும் சிலம்பம் மூவேந்தர்கள் காலம் தொட்டே இருக்கிறது. தற்போது கோவில் விழாக்கள், பண்டிகைகள் போன்ற கொண்டாட்டங்களின் போது சிலம்பம் சுற்றுதல் நடைபெறுகிறது.

தற்காப்பு கலையான சிலம்பத்தை ஆண், பெண் என இருபாலரும் சிலம்பம் கற்று வருகின்றனர். சமீபத்தில் ஒரு பெண் புயலை போல தீயாய் சுற்றிய சிலம்பம் இணையத்தில் தீயாய் பரவியது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் சூறாவளி போல் சிலம்பம் சுற்றியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது…..பெண் சிங்கம் ஓன்று வீறு கொண்டெழுந்து சுற்றிய சிலம்ப காணொலியை இங்கே காணலாம்….