படுகா நடனம் பார்த்திருக்கிறீர்களா? என்ன அழகாக ஆடுறாங்க பாருங்க… எவ்வளவு நேரம் ஆனாலும் பாத்துட்டே இருக்கலாம் போலயே..!

           பொதுவாகவே நடனத்தைப் பிடிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள். நடனம் ஆடுவதே ஒரு கலை. முன்பெல்லாம் முறையாக நடனம் கற்றவர்கள் மட்டும் தான் ஆடிக்கொண்டு இருந்தனர். ஆனால் இன்று டிவி பெட்டிகளின் பெருக்கத்தால் அதைப் பார்த்துக் கற்றுக்கொண்டே அனைவரும் நன்றாக ஆடுகிறார்கள். அதிலும், இப்போதெல்லாம் கல்யாண வீடுகளில் மணப்பெண்களே நடனம் ஆடுவதும் பேசனும் ஆகிவிட்டது. 

        இதை ரசிக்கவே கல்யாண வீட்டிற்கு வருவோரும் அதிகரித்து வருகின்றனர். மேற்கத்திய நடனமும், சினிமா பாடல் நடனமும் வேண்டுமானால் இந்த வரையறைக்குள் வரும். அதேநேரம் நம் பாரம்பர்யமான நடனத்திற்கு எப்போதுமே தனி இடம் உண்டு. அதை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்கள் மட்டுமே ஆட முடியும். இன்னொன்று நம் பண்பாட்டைக் கடத்த வேண்டும் என்னும் அபிப்ராயமும் அதனுள் இருக்கவேண்டும். அப்படியான உணர்வு இருப்பவர்கள் தான் தலைமுறை, தலைமுறையாக பாரம்பர்ய நடனத்தை அடுத்த, அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். 

 அந்தவகையில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த படுகர் சமூகத்தைச்சேர்ந்த பெண்கள் பாரம்பர்யமான படுகா நடனத்தை ஆடி அசத்தியுள்ளனர் இந்த மக்கள். படுகா  நடனமானது நீலகிரியில் வாழும் படுகர் மக்களால் ஆடப்படுகிறது. இவர்களது தாய் மொழி படுகு ஆகும். நாகரீக கால மாற்றத்தில் இன்றும் இந்த மக்கள் சினிமா பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தங்கள் கலாச்சார நடனத்தை ஆடும் சம்பவம் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்த நடனம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. 

You may have missed