முட்டை தோசை தெரியும்… முட்டை சப்பாத்தி எப்படி செய்யணும் தெரியுமா? பாக்கும்போதே சாப்பிட தோணுதே…!

     பொதுவாகவே உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களின் பேவரட் உணவு எது எனக் கேட்டால் சப்பாத்தி தான். சப்பாத்தியும், பூரியும் இன்றும் பலருக்கும் இஷ்ட உணவாக இருக்கிறது. சப்பாத்தி சாப்பிட்டால் டயட் மெயிண்டைன் ஆகும் என்பதாலேயே பலரும் அதை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

      சர்க்கரை நோயாளிகளுக்கும் சர்க்கரை மிகவும் உகந்த உணவாக இருக்கிறது. பொதுவாகவே நாம் தோசையில் தான் முட்டையை சேர்த்து முட்டை தோசையாகப் போடுவதைப் பார்த்திருப்போம். இங்கே ஒருவர் முட்டை சப்பாத்தி போட்டு அசத்துகிறார். மும்பையில் தான் சப்பாத்தியை இப்படி செம ஸ்டைலிஷாகப் போட்டு அசத்தியுள்ளனர். மேட்டர் ரொம்ப சிம்பிள் தான். கல்லில் முதலில் சப்பாத்தியைப் போட்டுக் கொள்கின்றனர். அது நன்றாக பொம்மி வர வேண்டும்.

  அப்படி வரும்போது, சப்பாத்தியில் கரண்டி வைத்து ஒரு ஓட்டை போட்டு அது வாய் போல் திறக்கிறது. அதனுள் முட்டை பொரியலுக்கு செய்வதுபோல் வெங்காயம், தக்காளி, மஞ்சள் பொடி, மிளகு பொடி, உப்பு எல்லாம் சேர்த்து ஊற்றி, கல்லில் போட்டு வேகவைக்கிறார்கள். ஒருகட்டத்தில் அதை எடுத்து நான்காக வெட்டி வைத்தால் செம டேஸ்டான முட்டை சப்பாத்தி ரெடியாகி விடுகிறது. இதோ இந்த வீடியோவைப் பாருங்கள். நீங்களே முயற்சித்துப் பாருங்க. இதுவரை ஏழரை கோடி பேர் இதை வியந்து பார்த்துள்ளனர். 

You may have missed