அம்மான்னா.. அம்மாதான்… கூட்டை விட்டு வெளியே வந்த குட்டிகள்… தாய் நாய் கொடுத்த ஒன்றை ரியாக்சன்.. கூட்டிற்கு தெறித்து ஓடிய குட்டிகள்..!

thaai_miral_vid_nzz

வெளியவந்து கொஞ்ச நேரம் விளையாடலாமுன்னு பார்த்த இவரு வேற சும்மா குரைத்து குரைத்து உள்ள வெரட்டிவிட்டுர்ராரு. சரி டா….. நாங்க உள்ள போயிடுறோம்….. நீ இங்கே காவலுக்கு இரு……

நாய்கள் தங்களது குட்டிகளை கண்ணும் கருத்துமாக பாதுகாக்கும். யாரேனும் குட்டிகளை எடுத்து சென்று விடுவார்களோ,இல்லை தொந்தரவு செய்வார்களோ என்று அஞ்சி அதன் அருகில் செல்வோரை முறைத்தவாறு உறுமி கொண்டே இருக்கும். யாரேனும் அதை தொந்தரவு செய்தால் அவரை நிச்சயம் கடித்து விடும், பிறகு குட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றிவிடும். நன்கு அறிமுகம் உள்ளவர்கள் மட்டுமே அதன் அருகில் நெருங்க முடியும்.

இந்த காணொளியில் 5,6 குட்டிகள் வெளியே வந்து விளையாடிகொண்டிருக்கும் போது அதன் தாய் குரைத்து ஒழுங்கா உள்ள ஓடிருங்க இல்ல வந்தேனா குரைத்து குரைத்து காதுலா இருந்து ரத்தம் வர வச்சுருவேனு மிரட்டியே உள்ளே அனுப்பிவிட்டது.

குட்டிகளும் ஏதோ பெரிய மிலிட்டரி ஆபிஸ்ர் வந்து விட்டார் என்கிற பாணியில் ஒரு நொடியில் உள்ளே சென்று விட்டன. இந்த கானொலியை காண்பதற்கு நகை சுவையாகயும், நாமும் சிறு வயதில் தாய், தந்தைக்கு பயந்த அனுபவத்தையும் நினைவூட்டுகிறது. உங்களுக்காக இதோ இந்த காணொலி.

You may have missed