என்ன ஒரு திறமை பாருங்க… மண்பானை குருவி எவ்வளவு ரியலா கத்துது பாருங்க..!

     நம் தமிழர்கள் விளையாட்டுப் பொருட்களில் மண் பாண்டத்திற்கு மிக முக்கியப் பங்கு உண்டு. மண்ணால் ஆன விளையாட்டு சாமான்களை வைத்துத்தான் நம் முந்தையத் தலைமுறைக் குழந்தைகள் அதிகளவில் விளையாடி வந்தன. 

  காலப்போக்கில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு மிதமிஞ்சி தலைதூக்கிவிட்டதால் விளையாட்டு சாமான்களையும் பிளாஸ்டிக்கில் வாங்கிக்கொடுக்கத் த்வங்கிவிட்டோம். இன்னொன்று சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மண் சாமானில் பொம்மை வாங்கிக்கொடுத்தால் உடனுக்குடன் உடைத்து விடுவார்கள் என்பதாலும் வேறு பொருள்களை நோக்கித் திரும்பிவிட்டனர். இருந்தும், மண்பாண்ட பொருள்களுக்கு இருக்கும் சிறப்பே தனிதான்.

  இன்றும்கூட குக்கரில் நாம் பொங்கிச் சாப்பிடும் ஆகாரத்தை விட, மண்பாண்டத்தில் செய்யும் சமையல் மிகவும் ருசியாக இருப்பதைப் பார்த்திருப்போம். இங்கேயும் ஒருவர் மண் பாண்டத்தில் குருவி ஒன்றை செய்துள்ளார். அதில் மேலும், கீழும் இரு துவாரங்கள் இருக்கின்றன. அதில் துவாரத்தின் வழியே தண்ணீரை விட்டுவிட்டு, அந்த ஓட்டையில் வாய் வைத்து ஊதினால் அச்சு, அசலாக குருவி கத்துவது போலவே சப்தமிடுகிறது. இதோ நீங்களே இதைப் பாருங்களேன். 

You may have missed