அச்சு அசலாக நடிகர் சிவாஜி போலவே இருக்கும் நபர்…. திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி செஞ்சதை பாருங்க..!

 திருமணம் என்றாலே அனைவரும் சந்தோசமாக பங்கு பெரும் நிகழ்ச்சியாகும். குடும்பங்களின் திருவிழா போன்று கொண்டாடுவர். முந்தைய காலங்களில் திருமண விழாக்களில் இன்னிசை நிகழ்ச்சிகளும், கச்சேரிகளும் நடைபெறும், நண்பர்கள்  கவிதைகள் தொகுத்து திருமண ஜோடியை வாழ்த்துவார்கள்.

இன்றைய தலைமுறையின்  திருமணவிழாக்களில் நடைபெறும் வரவேற்பில் இன்னிசை நிகழ்ச்சிகளும், நடன குழுவினருடன்  திருமண ஜோடியும் சேர்ந்து ஆடுவதும் பிரபலமாக உள்ளது. கேரளா போன்ற மாநிலங்களில் நடனக்குழுவினர் திருமண ஜோடிகளுக்கு முன்பே பயிற்சி கொடுத்து திருமண ஜோடியுடன்  நடன குழுவினரும் சேர்ந்து ஆடுவார்கள். இதனை பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும்.

இங்கு இந்த வீடியோவில் திருமண ஜோடிகளுக்கு நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் பாடல் பாடி வாழ்த்தினை தெரிவித்துள்ளார். ஆம், உண்மைதான் நடிகர் சிவாஜிகணேசன் அல்ல அவரை போன்றே தோற்றம் கொண்டவர். அவர் செவாலியர் சிவாஜிகணேசனின் ஒளிமயமான எதிர்காலம் என்ற பாடலுக்கு நடிகர் சிவாஜியை போன்றே நடன அசைவுகள் மூலம் திருமணஜோடிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இவர் கடலூர் சிவாஜி கணேசன் ஆவார். இவர் தத்ரூபமாக சிவாஜியை போன்றே நடிப்பதால் மக்கள் அவரை அங்கீகரித்ததோட அல்லாமல் மீண்டும் தங்கள் அபிமான நடிகரை நிஜத்தில் பார்ப்பது போல் உள்ளதாகவும், அவரை போன்று நடன அசைவுகள் இருப்பதுடன் அவரை போன்றே முக தோற்றமும் இருப்பதாக சமூகவலைதளவாசிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஒரு சிலர் அதற்கு எதிர்மறையாகவும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள். தற்போது இந்த வீடியோ நடிகர் சிவாஜிகணேசனின் ரசிகர்களுக்கு ஆறுதலாகவும், அந்தகாலத்திற்கு தங்களை அழைத்து செல்வதாகவும் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்கள்.