இந்த சிறுமி யார் என தெரிகிறதா..? தற்போதும் அதே முக ஜாடையுடன் இருக்கும் பிரபல நடிகை…


நடிகை மதுபாலா சென்னையில் பிறந்தவர். இவரது பெயர் பத்ம மாலினி,இவர் மும்பையில் பள்ளிக்கல்வியையும், பல்கலைக்கழகக் கல்வியும் பயின்றுள்ளார். இவர் நடிகை ஹேமமாலினியின் உறவினர். மேலும் நடிகை ஈஷா தியோலின் அத்தை என அறியப்படுகிறார். பழம்பெரும் ஹிந்தி நடிகையின் நினைவாக மது என்ற பெயரை மகளுக்கு சூட்டினார் அவரது தந்தை.

இவர் தமிழில் முதன் முதலாக இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் மம்முட்டி, பானுப்ரியா , கீதா அவர்கள் நடித்த அழகன் படத்தில் துரு துருவென குறும்புகள் செய்யும் இளம் பெண்ணாக நடித்திருப்பார். இவர் முதலில் மலையாள சினிமாவில் அறிமுகம் ஆனார், பின்னர் தமிழில் அழகன் படத்திற்கு பின்னர் அதே இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் வானமே எல்லை என்கிற படத்திலும் நடித்திருப்பார்.

மதுபாலாவின் தமிழ் சினிமா பயணத்தில் இன்றும் மக்களால் நினைவு படுத்தும் படங்களின் வரிசையில் முதலில், ரோஜா, ஜென்டில்மேன், மிஸ்டர்.ரோமியோ, பாஞ்சாலங்குறிச்சி போன்ற குறிப்பிட்ட படங்களில் நடித்துள்ளார். பாலியுட்டில் நடிகர் ரிஷிகபூர், அக்ஷய்குமார், ஜித்தேந்திரா, நஸ்ருதீன் ஷா, ஜாக்கி செராப், சயீப் அலிகான் போன்ற முன்னனி கதாநாயர்களுடன் நடித்துள்ளார்.

1999-ல் ஆனந்த ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அமெய் ஷா, கெய் ஷா என்று இரு மகள்கள் இருக்கிறார்கள். தற்போது மேற்படிப்பை லண்டனில் பயின்று வருகிறார்கள். யூ-டூப் சேனலுக்கு பேட்டி கொடுத்ததில் நடிகர் விஜய் மிகவும் பிடித்த நடிகர் என்றும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அவர் குழந்தை பருவத்தில் தன் இளைய சகோதரருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தினை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் சிறு வயது புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இது நம் ரோஜா மதுபாலாவா……என வியப்பில் ரசித்து வருகின்றனர். அந்த புகைப்படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது….
