கண்ணாத்தா படத்தில் அம்மனாக நடித்த நடிகை நீனாவா இது?இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க…

சாமி படங்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம். ஒவ்வொரு நேரத்திலும் ஏதாவது ஒரு சாமி படம் ரிலீசாகி பெரிய வெற்றியைப் பெற்றுவிடுவதுண்டு. அம்மன் தொடங்கி, க்ண்ணாத்தாள் வரை பெரிய பட்டியலே சொல்லலாம். அந்தவகையில் கண்ணாத்தாள் படமும் மக்களிடம் பெரிய அளவில் ஹிட் ஆனது.

சமீபகாலமாக தமிழ் சினிமா புதிய பரிணாமம் எடுத்திருப்பதால் சாமி படங்களின் வரவும் வெகுவாகக் குறைந்துள்ளது. கண்ணாத்தா படம் வசூல் ரீதியாக சாமி படங்களில் பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் நடிகர் கரண், குஷ்பு, நீனா உள்பட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். நீனா இதில் கண்ணாத்தாளாக நடித்திருந்தார். இதில் நடித்த நீனா இப்போது அடையாளமே தெரியாமல் மாறிப் போயிருக்கிறார்.

அவருக்கு திருமணம் முடிந்து இப்போது ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே நடிகை நீனாவா இது? அடையாளமே தெரியவில்லையே என கமெண்ட் செய்துவருகின்றனர்.