இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்க கொடுத்துதான் வைச்சிருக்கணும்… இந்த குடும்பம் சாப்பிடும் அழகே தனிதான்.. நீங்களே பாருங்க..!
சின்னஞ்சிறு வயதில் குழந்தைகளுக்கான உச்சகட்ட பொழுதுபோக்கு, நண்பர்கள் யார் எனக் கேட்டால் தாத்தா, பாட்டி என சொல்லிவிடலாம். தாத்தா மடியில் இருந்து கதை கேட்காத குழந்தைகளே இருக்காது. பாட்டியின் கைபிடித்து மிட்டாய் வாங்கி வந்த குழந்தைகள் தான் நாம். தாத்தாக்களின் சைக்கிளிலோ, ஸ்கூட்டரிலோ முன்னாள் நின்று கொண்டு சென்ற பொடிசுகள் இங்கு அதிகம்.
தாத்தா, பாட்டிகளும் வீட்டில் இருக்கும் பேரக்குழந்தைகளின் மீது உயிரையே வைத்து உள்ளனர். ஆனால் இதெல்லாம் நம் தலைமுறையும், இந்த தலைமுறையும் அனுபவித்தது. அடுத்த தலைமுறைக்கு கிடைக்குமா என கேள்வி எழுந்துள்ளது. காரணம், இன்று கூட்டு குடும்ப உறவுமுறையையே சிதைத்துவிட்டோம். கணவன், மனைவி தாண்டி தாத்தா, பாட்டிகளை பலரும் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு ரிலாக்ஸ்டாக இருக்கிறார்கள். இன்னொருபுறத்தில் இன்று கம்யூட்டர் உலகு ஆகிவிட்டது. குழந்தைகள் செல்போனிலும், மடிகணினியிலும் உலகைப் பார்க்கின்றன. இதனாலும் தாத்தா, பாட்டியின் மடியில் கிடந்து விளையாடும் வாய்ப்பை தவறவிடுகின்றனர்.
ஆனால் இன்றும் கூட்டு குடும்ப உறவை கச்சிதமாகப் பேணும் குடும்பங்களும் உண்டு. இதோ இந்த வீடும் அப்படித்தான். யார் எங்கே என்ன வேலையாக சென்றாலும் ஞாயிற்றுக்கிழமை என வந்துவிட்டால் குடும்பமாக சேர்ந்து இருந்து சாப்பிட்டு விடுவார்கள். இதோ இந்த வார ஞாயிற்றுக்கிழமையில் நண்டுக் குழம்பு வைத்து, குடும்பமாக அமர்ந்து டேபிள் முழுக்க இலை போட்டு 20 பேருக்கு மேல் கூட்டுக்குடும்பமாக ஒரே நேரத்தில் சாப்பிட்டனர். மலேசியாவைச் சேர்ந்த இந்தக் குடும்பத்தின் இந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படியொரு வாழ்க்கை கிடைக்க கொடுத்துதான் வைச்சுருக்கணும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.