தமிழ் சினி உலகில் மிக நீளமான பெயரை உடைய படம் எது தெரியுமா..?
ஒரு படத்திற்கு தலைப்பு என்பது மிக முக்கியமானது. படத்தின் தலைப்பு என்பது மக்களை கவரும் வகையில் இருக்க வேண்டும். கதைக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அந்த அளவு தலைப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள் டைரக்டர்கள்.
இந்த காலத்தில் படத்தின் தலைப்பு ஒரு எழுத்து கொண்டும், ஆங்கில எழுத்திலும் அமைவது ட்ரெண்ட் ஆக உள்ளது. இதனடிப்படையில் மிக லென்த்-ஆனா பெயரை கொண்டதாகா ஒரு படம் தமிழ் சினிமா வரலாற்றிலே முதல் இடம் பிடித்துள்ளது.
இப்படம் மன்சூர் அலிகான் ஹீரோவாகவும், நந்தினி ஹீரோயின் ஆகவும் நடித்து 1993ல் வெளிவந்த ராஜாதி ராஜ ராஜகுலோத்துங்க ராஜமார்த்தாண்ட ராஜகம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் ஆகும். பாலு ஆனந்த்-ன் டிரெக்ஷனில் வெளிவந்த இப்படத்தின் டைட்டில் மொத்தம் 52 எழுத்துக்களை கொண்டிருக்கிறது.
தங்கர் பக்சன் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இப்படத்தில் நெப்போலியன் மற்றும் விவேக் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மிக நீளமான இந்த படத்தின் தலைப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது .