சாலையில் நடந்து சென்றபோது யானை செய்த அந்த செயல்.. பல லட்சம் மக்களின் மனதை வென்ற காட்சி..!

பொதுவாகவே மிருகங்கள் மூர்க்க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அவைகளை நாம் தொந்தரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை பொழியக் கூடியவை தான். தமிழில் பிரபல திரைப்பட இயக்குநர் ராமநாராயணனின் பல படங்களிலும் யானை, நாய், குரங்கு, ஏன் பாம்பு கூட குழந்தைகளுக்கு உதவுவது போல் காட்சிகள் வரும்.

ஹாலிவுட்டிலும் ஒரு பெண்ணின் மீது கிங்காங் பாசம் காட்டுவதும், ஜங்கிள்புக் சீரியலில் குழந்தை காட்டுக்குள் வளர்வதையும், மிருகங்கள் அதனுடன் நேசம் காட்டுவதையும் நாம் பார்த்திருப்போம். அதிலும் மதம் பிடித்துவிட்டால் கோபம் கொக்கரிக்கும் யானைகள் நிஜத்தில் அவ்வளவு சாந்த சொரூபமானவை. அதிலும் தன் பாகன்களிடம் மிகவும் நெருங்கிய உறவில் இருக்கும்.

இங்கேயும் அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கேரளத்தில் யானைப் பாகன் ஒருவர், தன் யானையை அழைத்துக்கொண்டு சாலையில் போனார். யானையும் நேராக சாலையில் போய்க் கொண்டிருந்தது. வழியில் இறந்துபோன நாய் ஒன்று கிடந்தது. உடனே யானை அந்த உயிருக்கு மரியாதை செய்யும்வகையில் அதனை மிதித்து விடாமல் சாலையில் இருந்து கொஞ்சம் விலகிப் போய்விட்டு, மீண்டும் சாலையில் நடக்கத் துவங்கியது.
இன்னொரு உயிர் மீது அந்த அளவுக்கு அதன் இறப்புக்கு பின்பு கூட மிதித்துவிடக் கூடாது என யானை செய்த செயல் லட்சக்கணக்காணோரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரம் மனிதர்கள் சரளமாக வாகனங்களை அந்த இறந்துபோன நாயின் மீது ஏற்றிச் சென்றதையும் பார்க்க முடிந்தது. குறித்த அந்த யானையின் செயல் பலரது மனங்களையும் வென்றிருக்கிறது. மனிதத்துவம் நிறைந்த யானை என பலரும் பாராட்டி வருகின்றனர்.