சேவலுக்கும், சேவலுக்கும் சண்டை.. இடையில் வாத்து செய்த வேலையைப் பாருங்க.. மனிதர்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய பெரிய பாடம் இது..!
இன்று நாமெல்லாம் அவசர உலகத்தில் இருக்கிறோம். அவசரம் என்னும் பெயரில் நமக்குள் இருக்கும் மனிதத்தன்மையும் முற்றாக அழிந்து வருகின்றது. சாலையில் சக மனிதன் அடிபட்டுக் கிடந்தால் கூட ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுவோரை விரல் விட்டு எண்ணி விடலாம். தங்களுக்கு வேலை இருக்கிறது என ஒதுங்கிக் கொள்வோரே இன்று அதிகரித்து வருகின்றனர்.
அதேபோல் சாலையில் இருவருக்கு இடையில் சண்டை நடந்தால் கூட நாம் அதை அமைதியாக வேடிக்கைப் பார்த்து கடந்துவிடுகிறோம். அவர்களது சண்டையை விலக்கி விடும் வாய்ப்போ, நேரமோ கூட நம்மிடம் இல்லை. ஆனால் இப்படியான சூழலுக்கு மத்தியில் நமக்கெல்லாம் நச்சென அறிவுரை சொல்வது போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அப்படி என்ன நடந்தது எனக் கேட்கிறீர்களா? ஒரு விவசாயி, தனது வீட்டில் ஏராளமான கோழி, வாத்துகளை வளர்க்கிறார். இவை எப்போதும் ஒன்றாகவே அவரது வீட்டு புழக்கடையில் போய் மேய்வது வழக்கம். அப்படி மேய்ந்து கொண்டிருக்கையில், திடீரென இரு சேவல்களுக்கு இடையில் சண்டை ஏற்பட்டது. ஒன்றை மாற்றி, மாற்றி ஒன்று ஆவேசமாகக் கொத்திக் கொண்டிருந்தது. இதை வாத்து ஒன்று பார்த்தது. உடனே அது கூட்டத்திற்குள் புகுந்து இரு சேவல்களையும் விலக்கி விட முயற்சித்தது.
தொடர்ந்து ஆவேசமாக இன்னொரு சேவலைத் தாக்கிக் கொண்டிருந்த சேவலை தனியாக தானே இழுத்துப் போய் அதன் கூட்டில் கொண்டு போய்விட்டது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். மனிதர்களுக்கே இப்போதெல்லாம் இந்தத் தன்மை குறைந்துவிட்டது. இதோ நீங்களே பாருங்கள்!…