குழந்தை தவழ்வதற்கு கற்று கொடுத்த நான்கு கால்களை கொண்ட ஆசிரியர்… இந்த நாயின் தாயுள்ளதை பாருங்க..!


நன்றியுள்ள ஜீவன் என்றால் எல்லோருக்கும் ஞாபகம் வருவது நாய் தான். நமது செல்ல பிராணிகளில் முதலிடம் பெருவது நாய் ஆகும். உலகில் மூன்றில் ஒரு பங்கு வீடுகளில் நாய் வளர்க்கப்படுகிறது. மிகவும் விசுவாசமாகவும், பாதுகாப்பையும், அன்பையும் பொழிவதால் வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகளில் நாய் உலகளவில் முதலிடம் வகிக்கிறது.

நமது வீட்டில் ஒருவர் போன்று இருக்கும் நாய்களை பராமரித்து வளர்ப்பது இலகுவான ஒன்றாகும். கேட்பதை எளிதில் புரிந்து கொண்டு மனிதர்கள் இடும் கட்டளைக்கு ஏற்ப நடந்து கொள்ளும்.குழந்தைகளுடன் அலாதி பிரியமுடன் பழகும் இயல்புடையது. குழந்தைகள் உள்ள வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் பெரும்பாலும் குழந்தைக்கு அருகிலேயே இருக்க விருப்பப்படும்.
சமூக வலைத்தளங்களில் நாய்கள் குழந்தைகளுடன் விளையாடும் காணொலிகள் நிறைய பார்க்க முடியும். தாய் போன்று அன்பை பொழிவதிலும், தந்தை போன்று பாதுகாப்பு கொடுப்பதிலும் நாய்க்கு வேறு இணையான விலங்குகள் இல்லை எனலாம். மனிதர்கள் நாய்களுக்கு சில பழக்கவழக்கங்களை கற்று கொடுப்பார்கள். இது மனிதர்களுக்கு மட்டுமின்றி நாய்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு சிலர் அதற்கு மேல போய் சில விளையாட்டுகளையும் கற்று கொடுத்து போட்டிகளில் பங்கேற்ப வைப்பார்கள். இந்த மாதிரியான போட்டிகள் வெளி நாடுகளில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். மனிதர்கள் நாய்களுக்கு நல்ல பழக்கவழக்கங்களை கற்று கொடுப்பது இயற்கை தான்.

ஆனால் இங்கே ஒரு நாய்யானது குழந்தை தவழ்வதற்கு கற்று கொடுக்கிறது. முன்னால் இரண்டு கால்களையும், பின்னால் இரண்டு கால்களையும் ஒருசேர வைத்து படுத்து கொண்டு உடலை முன்னால் நகர்த்துகிறது. இதை பார்ப்பதற்கு ஆச்சர்யமாக உள்ளது. இந்த மாதிரி நாய்கள் படுத்து உறங்குமே தவிர தவழ்ந்து யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். இங்கே குழந்தைக்கே தவழ்வதற்கு நாய் பயிற்சி கொடுப்பது அதிசயமாக உள்ளது என சமூக வலைதளவாசிகள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். உங்களுக்காக அந்த காணொலி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது…….