மாவீரன் படத்தை வாழ்த்தி பாராட்டி பதிவிட்ட இயக்குனர் சங்கர்…


தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் ஜூலை 14 ஆம் நாள் வெளியான மாவீரன் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சியும் ஆக்சன் காட்சியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.தற்போது இப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் அவர்களையும் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் இந்தப் படத்திற்கு பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்களும் அவரது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.தற்போது அந்த பதிவானது ரசிகர்கள் பலராலும் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் படத்தை இயக்கிய இயக்குனர் அவர்களையும் நடித்த சிவகார்த்திகேயன் அவர்களையும் வெகுவாக பாராட்டியுள்ளார். பதிவு இணைப்பு கீழே…
