இப்படி கூட இட்லி அவிக்க முடியுமா..? பார்த்தாலே எச்சில் ஊறுதே..!
இட்லி தான் நம் தமிழ் மண்ணின் பாரம்பர்ய உணவு. ஆனால் நம்மில் பலரும் இட்லி என்றதுமே அய்யோ இன்னிக்கு இட்லியா என வீட்டில் நூடுல்ஸ் கிண்டிக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் நம் பாரம்பர்ய உணவான இட்லியில் இல்லாத சத்துக்களே இல்லை எனச் சொல்லிவிடலாம்.
இட்லியில் 2 கிராம் அளவுக்கு புரதம், 8 கிராம் அளவுக்கு கார்போஹெட்ரேட், நார்ச்சத்து 2 கிராம், இரும்புச் சத்து ஒருகிராம் இதனுடனே விட்டமின் ஏ, கால்சியம், பொட்டாசியம் ஆகியவையும் உள்ளன. ஒரு இட்லியில் அதிகபட்சம் 70 கலோரிகள் வரை இருக்கும். இட்லி தான் மிகவும் சரிவிகிதமான உணவு ஆகும்.
பொதுவாக நம் உடலில் பல நோய்களும் சரியாக செரிமானம் ஆகாத போதே எட்டிப் பார்க்கிறது. இட்லி எளிதில் செரிமானம் ஆகிவிடும். அதிகபட்சமே இரண்டு மணி நேரம் தான். அதனால் இட்லியை குழந்தைகளுக்கும் கூட கொடுக்கலாம். அதேபோல் இட்லியில் வாய்வுத் தொல்லையே இருக்காது. காரணம் அதற்கு எண்ணெய் பயன்படுத்துவது இல்லை. வேக வைப்பதால் வாய்வுத் தொல்லை இருப்பவர்களும் சாப்பிடலாம்.
ரத்த உற்பத்தியை அதிகரிப்பதிலும் இட்லிக்கு பெரும் பங்கு உண்டு. இதனால் நம் உடலுக்கு போதிய சக்தி கிடைப்பதோடு, தசைகளையும் வலிமையாக்கும். பொதுவாகவே நாம் இட்லியை அவித்து எடுப்பதைதான் பார்த்திருப்போம். ஆனால் வட இந்தியாவில் நூதனமுறையில் ஒரு சாலையோரக் கடையில் இட்லி போடுகிறார்கள். மேட்டர் சிம்பிள் தான். முதலில் தோசைக்கல்லில் வெங்காயம், தக்காளி, புதினா எல்லாம் போடுகிறார்கள். அதன் மேல் மாவை ஊற்றி அதன் மேல் ஒரு பிளேட்டை வைத்து மூடி அவித்து எடுக்கிறார்கள். இவர்கள் என்னவெல்லாம் செய்து இந்த இட்லியை ருசியாக்குகிறார்கள் என இந்த வீடியோவில் பாருங்கள்…