ஒற்றை சிரிப்பில் இந்த உலகத்தையே அடிமையாக்கிய குழந்தை… இணையத்தில் ட்ரெண்டாகும் குழந்தையின் சிரிப்பு..!

cute-smile-trends-video

குழந்தைகள் எதைச் செய்தாலும் அழகுதான். வீட்டில் குழந்தைகள் இருந்தால் நமக்கும் நேரம் போவதே தெரியாது. கள்ளம், கபடமே இல்லாதவர்கள் யார் எனக் கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு குழந்தைகள் எனச் சொல்லிவிடலாம். குழந்தைகளின் உலகம் எப்போதுமே குதூகலமானவை. அதனால் தான் ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள்.அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என தமிழ்க்கவிஞர்களும் பாடுகிறார்கள்.

குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் போரே அடிக்காதது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அது அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். அதிலும் பிஞ்சுக்குழந்தைகள் எதை செய்தாலும் ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

இங்கே ஒரு பிஞ்சு குழந்தை தன் அம்மாவின் கையில் இருந்து கொண்டு என சொன்னதும் தன் சுருங்கிய முகத்தை அப்படியே புன் முறுவலால் நிலவின் ஒளி போல் மாற்றி விடுகிறது.நீங்களே பாருங்க அந்த சிரிப்பினை. நீங்களும் அடிமையாகி விடுவீர்கள், வீடியோ இணைப்பு கீழே..

You may have missed