செம க்யூட்டாக நடுரோட்டில் சிங்காரிமேளம் வாசித்து அசத்திய இளம் பெண்… என்ன க்யூட்டாக அடித்து கலக்குறார் பாருங்க…!

இசை என்றாலே அனைவருக்கும் கொள்ளைப் பிரியம் தான். இவ்வளவு ஏன் பாம்பைப் பார்த்தால் படையே நடுங்கும் என்பார்கள். அந்த பாம்பே கூட மகுடி இசைக்கு மயங்கி வலையில் சிக்குவதைப் பார்த்திருப்போம். அந்த அளவுக்கு இசை வாழ்வோடு இரண்டறக் கலந்தது. இசைக்கு மொழியே கிடையாது. எந்த ஒரு இசையையும் மொழிகடந்து நாம் வெகுவாக ரசிக்கலாம்.

அதிலும் கேரள புகழ் சிங்காரி மேளம் என்றால் கேட்கவே வேண்டாம். அதைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். இங்கேயும் அப்படித்தான் இளைஞர்கள் சேர்ந்து சிங்காரி மேளம் வாசித்துக் கொண்டிருந்தனர். அதனைப் பார்த்த ஷில்பா ஸ்ரீகுமார் என்னும் இளம்பெண் அவர்களிடம் இருந்து மேளத்தை வாங்கி, அவரும் செம க்யூட்டாக சிங்காரி மேளம் அடிக்கிறார்.

ஆண்களுக்கு ஈடுகொடுத்து அவரும் செம மாஸாக சிங்காரி மேளம் வாசிப்பதை அனைவரும் ஆச்சர்யமாகப் பார்க்கின்றனர். அதை ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்துப்போட அந்தப் பதிவு வைரல் ஆகிவருகிறது.