மனதையே லேசாக்கும் குட்டி குழந்தைகளின் க்யூட் ரியாக்சன்.. இந்த புன்னகைக்கு முன்பு எதுவுமே விசயம் இல்லை..!

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும்.
‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும். குழந்தைக்காக இதனால் தான் பலரும் தவம் இருக்கிறார்கள். குழந்தை இல்லாததன் வலி குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மட்டும்தான் தெரியும்.

இங்கேயும் அப்படித்தான். சில குட்டிக் குழந்தைகளின் க்யூட்டான ரியாக்சன்கள் இங்கே அழகாகத் தொகுக்கப்பட்டுள்ளன. சலூன் கடையில் முடிவெட்டும் போது செம க்யூட்டாக ரியாக்சன் செய்யும் குழந்தை தொடங்கி இங்கே அழகிய குழந்தைகளின் சுவாரஸ்யக் காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன. இதோ அவை உங்களுக்காக…