டேய், டேய்… வேண்டாம் சொன்னா கேளு…. குட்டி சேர் போட்டு உட்கார்ந்த சிறுவன்… கடைசியில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்..!
குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்திற்கு ஒரு அளவே இருக்காது. என்னதான் பயமுறுத்தினாலும், கடுமையாக நடந்து கொண்டாலும் அவர்கள் செய்யும் சேட்டைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு குழந்தைகள் வீட்டிலும் அன்றாடம் நடக்கும் நிகழ்வு தான். நாம் என்னதான் இப்படி செய்யாதே அடிபடும், அங்கே போகாதே, தண்ணீரில் விளையாடாதே, இங்கே போகாதே, வீட்டை குப்பையாகாதே என்று காட்டு கத்தினாலும் அவர்களது காதில் விழுவதில்லை. அவர்களின் உலகம் வேறு. அவர்கள் தங்கள் அனுபவம் மூலமே அதிகம் கற்று கொள்கின்றனர்.
முன் பெல்லாம் வீட்டினில் கரண்ட் கட் ஆனால் மெழுகுவர்த்தி ஏற்றுவார்கள் குழந்தைகளிட்ம் தீ சுட்டு விடும் கை வைக்காதே என்று கூறுவார்கள், அதையெல்லாம் பொருட்படுத்தாது பெரியவர்கள் நீங்கி சென்றதும் கையை நெருப்பில் வைத்து சூடு வாங்கி கொள்வார்கள். பிறகு நெருப்பை பார்த்தாலே ஓடி விடுவார்கள்.
இங்கே ஒரு பெரிய மனிதர் இந்த நாற்காலியில் உட்கார்ந்து காட்டுவேன் என்று சவால் விட்டு கொண்டு அதில் உட்கார்ந்து இருக்கும் போது எடை தங்க முடியாமல் நாற்காலி காலை வாரி விட்டு விடுகிறது.
இதை காண்பவர்கள் ஏன்டா இந்த அக்கினி பரிட்சை வேண்டாமுன்னு சொன்னேனே…. என்று அறிவுரை கூறுவார்கள்.