தம்பி எல்வின் கதாநாயகனாக நடிக்கும் புல்லட் படத்தில் ராகவா லாரன்ஸின் தெறிக்கவிடும் ஃபைட் சீன்…

நடன இயக்குனராக முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின் நடிகராக வந்து அதைத்தொடர்ந்து இயக்குனராகவும் கலக்கி கொண்டிருப்பவர் தான் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி மற்றும் நடித்த காஞ்சனா படம் நான்கு பாகங்கள் வந்தது.நான்குமே வெற்றியும் கொடுத்தது.

இவர் நடிப்பதுடன் மட்டுமில்லாமல் ஏழைமக்களுக்கும், மாணவர்களுக்கும் உதவி செய்து வருகிறார். இவர் மாற்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்.சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளிவந்த ஜிகிர்தண்டா படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

இதைத்தொடர்ந்து இவர் கால பைரவா மற்றும் பென்ஸ் என்கிற படத்தில் நடித்து வருகிறார். நேற்று இவரின் பிறந்தநாள் முன்னிட்டு கால பைரவா போஸ்டர் ரிலீஸ் ஆனது. இன்று இவரின் தம்பி நடிப்பில் வெளிவர இருக்கும் புல்லட் படத்தின் வீடியோ வெளிவந்துள்ளது. அதில் தெறிக்கவிடும் விதமாக ராகவா லாரான்ஸ் சண்டை காட்சிகளில் ஈடுபட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.