பிளேடி பெக்கர் படத்தின் சில காட்சிகள் வெளியீடு… கவினின் சேட்டைகளை ரசிக்கும் ரசிகர்கள்…

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை நுழைந்தவர் தான் கவின்.இவர் சிறு சிறு படங்களில் நடித்திருந்தாலும் அந்த அளவு இப்படமும் இவருக்குக்கு வெற்றிகொடுக்கவில்லை.சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் ரசிகர்களை ஈர்த்து வைத்துருந்தார்.இதைதொடர்ந்த்து இவருக்கு பிக் பாஸ் வெற்றி கொடுத்தது.

இவர் பிக் பாஸ்-3ல் வெற்றி பெறுவார் என மக்கள் நினைத்த நிலையில் இவர் வீட்டை விட்டு வெளியேறினார். இவருக்கு பிக் பாஸ் மூலம் ரசிகர்கள் கூட்டம் பெருகியது. இதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் இவர் நடித்த படமான லிப்ட் பிரமாண்ட வெற்றியை கொடுத்தது இவருக்கு.

அதைத்தொடர்ந்து இவரின் நடிப்பில் வெளியான டாடா படமும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது இவருக்கு.தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கும் கவின் தற்போது நெல்சன் இயக்கத்தில் வெளியாகும் ப்ளடி பெக்கர் படத்தில் நடித்துள்ளார்.இதன் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.இப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இதன் சில காட்சிகள் வெளியாகியுள்ளது.இதில் கவினின் ஆட்டத்தையும் சேட்டையையும் பார்த்த ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.