யாருப்பா இந்த பசங்க? குரங்கையே மிஞ்சிடுவாங்க போலயே… என்ன சம்பவம் நடக்குதுன்னு பாருங்க…!

         குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் எனச் சொல்வார்கள். அதை மெய்பிக்கும் வகையில் குரங்குகளும் மனிதர்களைப் போலவே சில சேட்டைகள் செய்வதைப் பார்த்திருப்போம். கையால் பழங்கள் உள்ளிட்டவற்றை சாப்பிடும்போதும் அதில் அப்படியே மனிதர்களின் சாயல் இருக்கும். அதேநேரத்தில் குழந்தைகள் சேட்டை செய்யும் போது உனக்கு இன்னும் வால் மட்டும் தான் முளைக்கல எனவும் சொல்வதைக் கேட்டிருப்போம்.

                          அந்த அளவுக்கு மனிதன், குரங்கு இருவரும் ஒத்த தன்மையைக் கொண்டவர்கள் தான். மனிதனுக்கு ஆறு அறிவு. குரங்குக்கு ஐந்தறிவு என்பதைத் தாண்டி பெரும்பாலான விசயங்கள் ஒத்துப்போகும் தன்மை கொண்டவையே. ஆனால் இப்போது குரங்குகளுக்கே சவால் விடும்வகையில் சில சிறுவர்கள் மரம் விட்டு மரம் தாவும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

  பொதுவாக குரங்குகளைப் பொறுத்தவரை ஒரு மரத்தில் ஏறிவிட்டால் கிளை விட்டு, கிளை தாவும். அதேபோலத்தான் இங்கும்! ஒரு அழகான கிராமத்தில் ஆறு ஒன்று இருக்கிறது. அதன் பக்கத்திலேயே ஆலமரம் ஒன்றும் இருந்தது. அதன் விழுதைப் பற்றி ஆடும் இளைஞர்கள் குரங்கு மரம் விட்டு மரம் தாவுவதைப் போல, விழுதில் இருந்து மரக்கிளைகளுக்குத் தாவுகிறார்கள். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். குரங்குக்கே சவால் விடுவதுபோல் இந்த இளைஞர்கள் மிரட்டுகிறார்கள். இதோ அந்தக் காட்சி உங்களுக்காக…

You may have missed