பொறுமைக்கு கிடைத்த வெகுமதி… ரச்சித்தாவின் பிக் பாஸ் சம்பளத்தை கேட்டு வியந்த நெட்டிஸன்கள்..

bigg-boss-rachitha-salary-leaked-news

பிக் பாஸ் சீசன்-6 தற்போது இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. தற்போது இறுதி போட்டியாளர்களாக விக்ரமன், அஸீம், ஷிவின், கதிர், ஏ.டி.கே, மைனா போட்டியாளர்களாக தொடர்ந்து வருகின்றனர். கடந்த வாரம் மைனா அல்லது ஏ.டி.கே வெளியேறுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் ரக்ஷித்தா மகாலெட்சுமி வெளியேறி உள்ளார்கள். வெளியேறுவதை சற்றும் எதிர்பார்க்காத ரக்ஷித்தா மிகவும் கலங்கி விட்டார்.

பிக் பாஸ் வனிதா அவர்கள் பிக் பாஸ் இறுதி பங்கேற்பாளராக தகுதி இல்லாத நபர்களில் ரக்ஷித்தா உள்ளார் என்றும் கருத்துக்கள் தெரிவித்து வந்தார். பொறுமையின் சொரூபமாக அமைதியான பாங்குடன் நடந்து கொண்டதால் மக்கள் சற்று குழப்பமான மனா நிலையில் இருந்தனர். இவரின் உண்மையான குணாதிசயம் என்ன என்றும்,இவரை விரும்பிய ரசிகர்கள்….. நல்ல மனிதர் என்றும் அமைதியான முறையில் யாரையும் காயப்படுத்தாமல் விளையாடினார்…… என்றும் பலவாறு கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். கடந்த வார இறுதியில் அவர் சற்றும் எதிர்பாராத விதமாக வெளியேறியதை அவரால் ஏற்று கொள்ள முடியவில்லை. மிகவும் மனவருத்தத்துடன் வெளியேறினார்.

பல தொடர்களில் நடித்து புகழ் பெற்ற ரக்ஷித்தா சரவணன் மீனாட்சி சீசன்-2 மக்களால் மீனாட்சியாக அங்கீகரிக்கப்பட்டார். அதை தொடர்ந்து மற்ற தொலைக்காட்சி தொடர்களில் பணிபுரிந்த வந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று தற்போது வெளியாகி உள்ளார். அவரின் ஒரு நாள் சம்பளமாக ரூபாய் 28.000/-வழங்க பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 90 நாட்களை கடந்த அவர் 25 லட்சத்திற்கும் மேலாக அவருக்கு சம்பளமாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

You may have missed