அம்மாவை பார்த்து முதன் முதலாக சிரித்த பிஞ்சுக் குழந்தை… கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத வரம், பாருங்க..!

கள்ளம், கபடமே இல்லாதவர்கள் யார் எனக் கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு குழந்தைகள் எனச் சொல்லிவிடலாம். குழந்தைகளின் உலகம் எப்போதுமே குதூகலமானவை. அதனால் தான் ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள்.

அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என தமிழ்க்கவிஞர்களும் பாடுகிறார்கள்.

குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் போரே அடிக்காதது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அது அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். அதிலும் பிஞ்சுக்குழந்தைகள் எதை செய்தாலும் ரசித்துக் கொண்டே இருக்கலாம். இங்கே ஒரு பிஞ்சுக்குழந்தையின் சிரிப்பும் அப்படித்தான் நம்மை வெகுவாக ஈர்க்கிறது.

அந்தக்குழந்தையின் தாய் கொஞ்சக், கொஞ்ச முதன் முதலாக அந்தக்குழந்தை தன் தாயைப் பார்த்து சிரிக்கிறது. கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத அந்த அரியக்காட்சி இதோ…காணொலியில் பார்த்து மகிழுங்கள்..

You may have missed