இந்த குட்டி சிறுவன் யார் என்று தெரிகிறதா..? தற்போதய இளைய தலைமுறையினரின் கனவு நாயகனாக வலம் வரும் இளம் ஹீரோ…!

வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களில் அதிரடியாக நடித்து படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் கதாநாயகன் அதர்வா முரளி. இவரது தந்தை முரளியும் நடிகர் ஆவார். நடிகர் முரளி கன்னட மற்றும் தமிழ் திரையுலகில் நடித்த கதாநாயகன் ஆவார். இவர் பெரும்பாலும் காதல் தோல்வியை வெளிப்படுத்தும் கதாநாயகனாக நடித்திருப்பார். இவரின் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் சோக பாடல்களாக 80-ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த பாடலாக அமைந்திருக்கும்.

கன்னடத்தில் அறிமுகம் ஆன இவர் தமிழ் திரையுலகில் பூவிலங்கு படத்தில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு மணிரத்தினம் இயக்கிய பகல் நிலவு படத்தில் நடித்தார், மேலும் மணி ரத்தினம் அவர்களுக்கு இது முதல் படமாகும். இவரின் மனைவி சோபா, இவர்களுக்கு மூன்று குழந்தைகள் அதில் காவ்யா , அதர்வா, ஆகாஷ். இதில் அதர்வ 2010-ம் ஆண்டு பானா காத்தாடி படத்தின் மூலம் சமந்தாவிற்கு ஜோடியாக நடித்திருப்பார்.

முப்பொழுதும் உன் கற்பனைகள்,இயக்குனர் பாலா இயக்கத்தில் பரதேசி போன்ற படங்களில் நடித்துள்ளார். பரதேசி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது.

இரும்பு குதிரை, சண்டி வீரன், ஈட்டி ,செம போத ஆகாத,இம்மைக்கா நொடிகள், பூமாரங் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது புகைப்படம் வைரல் ஆகியுள்ளது. அதற்கு காரணம் குழந்தைகளுக்கு பிடித்த ஆங்கில படலானா சப்பி சீக்ஸ்…டிம்பிள் சின்…..பாடல் இவருக்கு பொருந்தும். சிறு வயதில் தன்தாய் தந்தை எடுத்து கொண்ட அழகிய புகைப்படம் இணையவாசிகளை கவர்ந்துள்ளது. அந்த புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

pic1

pic2

pic3

pic4