பெற்ற மகனையே கதறவிட்ட அப்பா… பிராங் பண்ண இப்படியா செய்வீங்க…

appa-son-fun-prank-news-vid

விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் குழந்தைகளுடன் விளையாடுவார்கள். சிறுவர்களை அருகில் இருக்கும் பூங்காவிற்கும், பொழுபோக்கு இடங்களுக்கும் அழைத்து சென்று நேரத்தை குழந்தைகளுடன் செலவழிப்பது வழக்கம். குழந்தைகள் தான் எப்போதும் குறும்புகளை செய்து கொண்டிருப்பார்கள். குறும்புகள் செய்வது வேடிக்கையாக இருக்கும், மேலும் அவற்றை பார்த்து ரசிப்பது பெற்றோர்களுக்கு பிடித்தமான ஓன்று.

சிறுவர்களுக்கு மிட்டாய்கள் என்றால் கொள்ளை பிரியம்……உணவு வேண்டாம் சாக்கலேட் தான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் குழந்தைகள் அதிகம் இருப்பார்கள். அவர்கள் உணவை சாப்பிட வைப்பதற்கு பெற்றோர்கள் பல வித யுக்திகளை கையாள்வார்கள். அதில் ஓன்று நீ ஒழுங்கா சாப்பிட்டால் சாக்கலேட், ஐஸ் கிரீம் போன்ற இனிப்புகளை வாங்கி தருவேன் என்று கூறுவார்கள். அப்படி கூறும் போது அடம் பிடிக்காமல் சாப்பாட்டை முழுவதுமாக சாப்பிடுவார்கள்.

குழந்தைகள் தான் குறும்புகள் செய்து பெற்றோரை அலற விடுவார்கள் ஆனால் தந்தையும் மகனிடம் குறும்பு செய்து மகனை அலற விடுவார் என்று இங்கு ஒருவர் நிரூபித்திருக்கிறார்.சாப்பிட வைப்பதற்கு அது வாங்கி தருவேன்….இது வாங்கி தருவேன்…….என்று ஆசை காட்டும் பெற்றோர்களுக்கு மத்தியில் இங்கு ஒரு தந்தை சும்மா விளையாட்டாக மிட்டாய் சாப்பிட்டு கொண்டிருந்த மகனிடம் நீ மிட்டாய் சாப்பிட வில்லை என்றும் நீ சாப்பிட்டது எலி மருந்து எனவும், சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளும் எனவும் மகனை பிராங்க் செய்தார். அப்போது சிறுவன் நீ சும்மா பயமுறுத்தாத என்று அவனும் கலாய்க்க இறுதியில் மீண்டும் தந்தை கூறியதால் மனக்கலக்கம் அடைந்து பயத்தில் அவர் செய்த செயல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது….அந்த காணொலி காட்சியை இங்கே காணலாம்

You may have missed