அன்னபூரணி அம்மாவிற்கு வாழ்க்கையை அர்ப்பணித்த நபர்… 3’வது திருமணத்திற்கு ரெடி ஆகும் அன்னபூரணி…

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடந்த சொல்வதெல்லாம் உண்மை என்கிற ரியாலிட்டி ஷோவ்விற்கு அடுத்தவர் கணவரோடு தொடர்புகொண்டு வந்தவர் தான் அன்னபூரணி.ஆனால் தற்போது இவர் மக்கள் மத்தியில் அன்னபூரணி அம்மா என்றே அழைக்கப்படுகிறார்.

இவர் தன்னை ஆதிபராசக்த்தியின் உருவம் எனக்கூறி சாமி ஆகியுள்ளார்.இவரை அன்னபூரணி அரசு அம்மா என்றும் கூறுகிறார்கள்.இவர் பக்தர்களுக்கு ஆசியும் வழங்கி குறைகளையும் தீர்த்து வருகின்றார்.இவரின் அருள்வாக்கு வீடியோ இணையத்தில் எப்பொழுதும் பரவி கொண்டே இருக்கும்.

மக்கள் இவருக்கு மலை அணிவித்து,பூஜை செய்து,மலர்கள் தூவும் வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகியது. இந்நிலையில் இவர் வரும் நவம்பர் 28 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்துள்ளார். நான் எவ்வளவு பெரிய சக்தியாக இருப்பினும் இந்த சமுதாயத்தில் தனி ஒரு பெண்ணாக இருப்பது கடினம் என கூறியுள்ளார். தனது முதல் திருமணம் நடந்த அதே நாளிலே ஆன்மிகத்திற்காக தன்னை அர்ப்பணித்த ரோகித்தை திருமணம் செய்ய போகிறேன் என அறிவித்துள்ளார்.அனைவரும் திருமணத்தில் கலந்து கொண்டு ஆசிர்வாதம் வாங்கி செல்லுமாறும் கூறியுள்ளார்.