அழகும். உச்சரிப்பும் தமிழில் செய்தி வாசித்து கலக்கிய செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர்.. இணையத்தில் வைரலாகும் காணொளி…!


செயற்கை நுண்ணறிவு என்பது தானாகவே இயங்கும் ஒரு கணினி அமைப்பாகும். இதற்கு தேவையான அனைத்து தரவுகளும் ட்ரைன் செய்யப்பட்டு செயற்கை நுண்ணறிவுகள் உருவாக்கப்படுகின்றன.செயற்கை நுண்ணறிவு பொதுவாக கணினியில் பயன்படுத்தப்படுகிறது அதிலும் ப்ரோக்ராமிங் கிப்டுகளில் உருவாக்கப்பட்டு இயங்க வைக்கப்படுகிறது. தற்போது பல வகையான பிரிவுகளில் செயற்கை நுண்ணறிவு இயக்கங்கள் இணையத்தில் பயன்படுத்தப்படுகிறது.

கதைகளை உருவாக்கவும், ஒலியலை உருவாக்கவும், படங்களை உருவாக்கவும் செயற்கை நுண்ணறிவியல் பயன்படுகிறது. அந்த வகையில் தற்போது செய்திகளை வாசிக்க செயற்கை நுண்ணறிவில் உருவாக்கப்பட்ட பெண் ஒருவர் வைரலாகி வருகிறார். அதில் கொடுக்கப்பட்ட செய்தியினை பிழையின்றி தமிழில் அப்படியே வாசிக்கின்றார் அதன் காணொளி ஆனது இணையத்தில் வைரலாகி வருகிறது.வீடியோ இணைப்பு கீழே…