இந்தப் புகைப்படத்தில் இருக்கும் குட்டிக் குழந்தை யாருன்னு தெரியுமா? இன்று அனைவருக்குமே தெரிந்த பிரபலம்..


பிரபலங்களை சின்ன வயது புகைப்படமாகப் பார்ப்பது மிகவும் அழகானது. அது நம்மை வெகுவாக ரசிக்கவும் வைக்கும். அந்த வகையில் இப்போது ஒரு சிறுமியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த சிறுமி இன்று பிரபல நடிகையும் கூட…அவர் யார் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்

மலையாளப் படங்களின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர் நடிகை ஷோபனா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என அம்மணி ஏக பிஸியாக வலம்வந்தார் 80 முதல் 90, 93 வரையிலான காலக்கட்டத்தில் முண்ணனி நடிகையாக இருந்த ஷோபனா, எனக்குள் ஒருவன் என்னும் படம் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். தொடர்ந்து சட்டத்தின் திறப்பு விழா, பாக்யராஜ் நடித்த இது நம்ம ஆளு, என்கிட்ட மோதாதே உள்ளிட்ட பல படங்கள் ஹிட் அடித்தது.

தமிழ் சினிமாவில் இருந்து நீண்ட காலத்திற்கு ஒதுங்கியே இருந்த ஷோபனா கடந்த 2012 ஆம் ஆண்டு சிம்பு நடித்த போடோ போடி படம் மூலம் ரீ எண்ட்ரி ஆனார். பரதநாட்டியத்தின் மீது அளவுகடந்த ஆர்வம் கொண்ட ஷோபனா சென்னையில் ஒரு பரதநாட்டிய பள்ளியும் நடத்தி வருகிறார். இதுவரை நடிகை ஷோபனா திருமணமும் செய்துகொள்ளவில்லை. சரி விசயத்துக்கு வருவோம். அந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை நடிகை ஷோபனாதான்!
pic 1

pic2
