யாருப்பா இவரு.. லோடு ஆட்டோவில் ஏத்துறதை பைக்கில் ஏத்துறாரு… இந்தக் காட்சியைப் பாருங்க ஷாக்காகிடுவீங்க..!

    சிலர் எப்போதுமே எதையும் வித்தியாசமாகவே செய்து பலரது பார்வையையும் ஈர்ப்பார்கள். இங்கேயும் ஒரு மனிதர் அப்படித்தான். அவரது வித்தியாசமான நடவடிக்கையினால் அனைவரையும் ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். அப்படி அவர் என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

    பொதுவாக டூவீலர்கள் இல்லாத வீடுகளே இன்று இல்லை. நம் பயணத்தை விரைவாக ஆக்கியதில் டூவீலர்களின் பங்களிப்பு மிக அதிகம். டூவீலர்களிலினால் பயணம் எளிதானது. மோட்டார் சைக்கிளில் ஓரளவிற்கான பொருட்களை லோடாக வைத்துக்கொண்டு செல்ல முடியும். அதேநேரத்தில் அதிக எடையுள்ள பொருள்களைக் கொண்டு செல்ல லோடு ஆட்டோ எனப்படும் சுமையுந்து ஆட்டோவைத்தான் பிடித்துச் செல்வார்கள். இங்கேயும் அப்படித்தான். ஒருவர் தன் வீட்டுக்கு சிமெண்ட் மூடை வாங்கினார். 

கிட்டத்தட்ட 1000 கிலோ அளவுக்கு வாங்கியவர், லோடு ஆட்டோவோ, சின்ன மினி டெம்போவோ பிடித்து வந்தால் செலவு அதிகம் என்பதால் தானே தன் டூவீலரில் தனி ஒருவராக முதலில் 550 கிலோ மூடையை ஏற்றிக்கொண்டு வீட்டை நோக்கிப் போனார். ஒரு நிமிடம் இந்தக் காட்சியைப் பாருங்கள். நீங்களே அதிசயத்துப் போவீர்கள். அந்த கம்பெனிக்காரர்கள் இந்த காட்சியை தங்கள் நிறுவனத்தின் மாடலாகவே ரிலீஸ் செய்யலாம் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

You may have missed