கோலாகலமாக நடந்து முடிந்தது நாகசைதன்யா மற்றும் சோபிதா திருமணம்… ஆனந்தத்தில் மனம் நெகிழ்ந்த நாகஅர்ஜுனா…

திரையுலகில் மிகவும் முக்கிய பிரபலங்களில் ஒருவர் தான் நாகஅர்ஜுனா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து கலக்கியுள்ளார். இவரின் மூத்த மகனான நாகசைதன்யா அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை சமந்தா அவர்களை காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்தின் படி ஹிந்து முறைப்படி கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார். அதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

அதன் பிறகு நாகசைதன்யா அவர்கள் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவியின் ஜோடியாக நடித்த சோபிதா துலிபலாவை தனது புது காதலியாக ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதைதொடர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்ட் 8-ல் இவர்களுக்கு கோலாகலமாக நிச்சர்த்தார்த்தம் நடந்து முடிந்தது. இவர்களின் திருமணம் டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது என அறிவித்திருந்தார்கள்.

இந்நிலையில் இவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரல் ஆகியது. திருமணம் ஹைதராபாத்தில் நாகஅர்ஜுனாவின் சொந்த அன்னபூர்ணா ஸ்டுடியோவில் வைத்து நடைபெறுவதாக கூறியிருந்தார்கள். இவர்களின் திருமணத்திற்கு வெறும் 300 நபர்களுக்கு மட்டுமே இன்விடேஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பிரபலங்கள் பல கலந்துகொள்ள இரு வீட்டாரின் முன்னிலையில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இப்புகைப்படங்களி நாகஅர்ஜுனா இது எங்கள் குடும்பத்தில் ஒரு உணர்ச்சி பூர்வமான நிகழ்வு என பதிவிட்டு பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

You may have missed