ஏ.ஆர்.ரகுமானின் விவகாரத்தை தொடர்ந்து விவகாரத்துபெறும் அவரின் பின்னணி கிட்டாரிஸ்ட் மோகினி டே… வேகமாக கிளம்பும் சர்ச்சைகள்…
பிரபல இசையமைப்பாளர் மட்டும் பாடகராக தமிழில் மட்டுமில்லாம பிற மொழிகளிலும் திகழ்பவர் தான் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள்.இவருக்கு திருமணமாகி கிட்டத்தட்ட 29 வருடங்கள் ஆன நிலையில் திடீரென 2 தினங்கள் முன் இருவரும் விவகாரத்து செய்யப்போவதாக அறிவித்திருந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவர்களுக்கு திருமணமாகி இத்தனை வருடம் ஆன பிறகு ஏன் விவகாரத்து என பலரும் கேள்வி கேட்டு வந்திருந்தனர். இவர்களுக்கு 2 மகள்களும் 1 மகனும் இருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து இவரின் பின்னணி கிட்டாரிஸ்ட் மோகினி டேவும் விவாகரத்து தன் கணவரிடம் இருந்து பெற போவததாக அறிவித்துள்ளது இன்னும் சில நெட்டிசன்களை பேச வைக்கும் விதமாக உள்ளது.
விவாகரத்தை தொடர்ந்து ரகுமான் அவர்களின் மனைவி சாய்ரா ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.அதற்க்கு ரகுமான் அவர்களும் பதில் சொல்லும் விதமாக ஒரு பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.இதற்க்கு அவரது மூத்த மகள் மனம் நொறுங்கியபடி கையெழுப்பி கும்பிடுவது போல் ஒரு பதிவை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.