2024-ல் இருக்கோம்… குறைகளை மட்டுமே சுட்டிகாட்டாதிங்க… கோபத்தில் பேசிய சமந்தா…

பானா காத்தாடி படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நாயகிகளுள் ஒருவரானவர் தான் சமந்தா.இவர் அதை தொடர்ந்து பல படங்கள் நடித்து வெற்றியை கொடுத்தார்.2017 ஆம் ஆண்டு தெலுங்கானாவை சேர்ந்த நடிகர் நாகா அர்ஜுனாவின் மகனான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னும் அவர் பல படங்கள் நடித்து மக்கள் மனதில் பிரபலமாகவே இருந்தார். பின் இவருக்கும் இவரது கணவருக்கும் கருத்து வேறுபாட்டின் காரணமாக 2021-ல் விவாகரத்து நடந்தது. அதை தொடர்ந்து இவர் கொஞ்சம் நல்ல படங்களை தேர்வு செய்யவில்லை என கூறியுள்ளார். உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது பாலிவுட்டில் களம் இறங்கியுள்ளார்.

தற்போது இவர் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, நான் என் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் சில படங்கள் நான் சரியாக தேர்வு செய்யவில்லை என்றும் என் உடல் எடை குறைவை அனைவரும் காரணம் சுட்டிகாட்டி கேலி செய்கிறார்கள். நான் மயோசிட்டிஸ் நோய்யால் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவர் கூறும் அறிவுரையின் படியே உணவு உட்க்கொள்ள வேண்டுமெனவும் நாம் இப்போம் 2024-ல் இருக்கோம் தயவு செய்து ஒருவரின் குறைகளை மட்டுமே சுட்டிகாட்டாதீர்கள் என ஆத்திரத்தில் கூறியுள்ளார்.

You may have missed