இளமை திரும்புதே..!! 60 வயதிலும் மகன் திருமணத்தில் மனைவியுடன் நடனம் ஆடி மகிழ்ந்த நடிகர் நெப்போலியன்…

பாரதிராஜாவால் சினிமா உலகிற்கு வந்தவர் தான் நடிகர் நெப்போலியன். இவர் வில்லனாகவும், கதாநாயகனாகவும், அண்ணனாகவும், தம்பியாகவும் தற்போது அப்பாவாகவும் தாத்தாவாகவும் கூட நடித்து வருகிறார். இவரது மகன் சிறு வயதில் இருந்தே தசை சிதைவு என்னும் நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் 25 வயது ஆன தனுஷ் அவர்கள் தனது தந்தையின் ஐடி நிறுவனத்தை கவனித்து வருகிறார்.இந்நிலையில் தனுஷிற்கு நெப்போலியனின் நெருங்கிய உறவின பெண்ணான திருநெல்வேலியை சேர்ந்த அக்க்ஷயா அவர்களை திருமணத்திற்காக பேசி நிச்சயதார்த்தம் நடத்தி முடித்திருந்தனர். தற்போது நேற்று இவர்களுக்கு பெரியவர்கள் முன்னிலையில் ஜப்பானில் வைத்து திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.

இந்நிலையில் நேற்று கோலாகலமாக நடந்த திருமணத்தில் நெப்போலியன் அவர்கள் மிகுந்த ஆனந்தத்துடன் தனது மனைவியுடன் மனசும் இப்போம் தந்தியடிக்குது என்ற காதல் பாடலிற்கு நடனமாடி கலக்கியுள்ளார். இந்த வீடியோ தற்சமயம் இணையத்தில் பரவி வருகிறது.

You may have missed