விஜயை என் மூத்த பிள்ளையாக நினைத்து வாழ்கிறேன்… அவரை பார்ப்பது தான் என் கடைசி ஆசை..!! கண்ணீருடன் கூறும் பாட்டி…

0

நாளையதீர்ப்பு படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகி இன்று பட்டித்தொட்டியெல்லாம் கலக்கி கொண்டிருக்கும் நடிகர் தான் விஜய். சிறு குழந்தைகளில் இருந்து பெரியவர் வரி இவரை தெரியாதவர்களே இருக்கமுடியாது. அந்தவகையில் நெல்லையை சேர்ந்த மூதாட்டி ஒருவர் விஜயின் தீவிர ரசிகை மற்றும் விஜய்யை தனது மகன் போன்று என்றும் கூறியுள்ளார்.

இந்த மூதாட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது, எனக்கு 65 வயதாகிறது எனக்கு ஒரு மகன் உள்ளார். அவர் பெயர் வெங்கடேசன் எனது மூத்த மகன் விஜய் தான் நான் அப்படி நினைத்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எனது கடைசி ஆசை அவரை பார்ப்பது தான். பால் குடத்தில் பணம் சேமித்து வருகிறேன் ஏழுமலையான் கோவில் சென்று அங்கு வைத்தாவது விஜயை பார்த்துவிட வேண்டுமென்று வேண்டி வருகிறேன்.

மேலும் அவர் கூறுகையில், விஜயின் புகைப்படத்தை தான் நான் பீரோவில் வைத்து வருகிறேன் தினமும் அந்த புகைப்படத்துடன் பேசுவேன் முத்தம் கொடுப்பேன். என் அம்மா 75 வயதில் இறந்தார்கள் நான் இவரை பார்த்தவுடன் இறக்கணும் என மிக உருக்கமாக கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed