திருமணத்திற்கு முன் ப்ரீவெட்டிங் ஷூட்டில் சந்தோஷத்துடன் நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ்….

0

பாரதிராஜாவால் சினிமா உலகிற்கு வந்தவர் தான் நடிகர் நெப்போலியன். இவர் வில்லனாகவும், கதாநாயகனாகவும், அண்ணனாகவும், தம்பியாகவும் தற்போது அப்பாவாகவும் தாத்தாவாகவும் கூட வருகிறார். இவரது மகன் சிறு வயதில் இருந்தே தசை சிதைவு என்னும் நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நெப்போலியன் அவர்கள் தனது மகன் தனுஷிற்கு ஜப்பானில் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக குடும்பத்துடன் ஜப்பானிற்கு கப்பலில் சென்றார். இவரது மகன் தனுஷால் விமானத்தில் பயணிக்க இயலாமல் கப்பலில் சென்றதால் இவருக்கெல்லாம் எதற்கு திருமணம் என மனதை காயப்படுத்தும் அளவிற்கு பலரும் சோசியல் மீடியாவில் கேட்டு வந்தனர். இதெற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் தனுஷும் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

இந்நிலையில் வருகின்ற நவம்பர் 7 ஆம் தேதி இவரின் திருமணம் ஜப்பானில் நடக்க இருக்கும் நிலையில் அதில் கலந்துகொள்ள தமிழ் திரை பிரபலங்கள் பலர் ஜப்பான் சென்றுள்ளனர். இந்நிலையில் தனுஷ் மணப்பெண்ணுடன் நடத்திய ப்ரீ-வெட்டிங் சூட் இணையத்தில் பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலர் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *