விஜய் சேதுபதி யாரையும் பேசவிடுவதில்லை… BB வீட்டை விட்டு வெளியேறிய தர்ஷா குப்தா கிளப்பிய சர்ச்சை…
கடந்த 7 வருடங்களாக உலகநாயகன் கமல்காசனால் தொகுத்து வழங்கப்பட்ட பிக் பாஸ் இந்த வருடம் விஜய் சேதுபதி அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில் இதில் இருந்து சில போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆகி வெளியேவும் வந்துள்ளனர். இதில் முதல் வாரம் ரவீந்தர் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்தடுத்தாக நபர்கள் வீட்டை விட்டு வெளியேறும் நிலையில் நிகழ்ச்சி தற்போது காரசாரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஒரு போட்டியாளராக உள்ளே வந்தவர் தான் தர்ஷா குப்தா. இவர் வீட்டை விட்டு மூன்றாவது வாரம் வெளியேறினார். இவருக்கு குக் வித் கோமாளியில் கிடைத்த வரவேற்பு பிக் பாஸ்-ல் கிடைக்கவில்லை.
வீட்டை விட்டு வெளிவந்த தர்ஷா குப்தா பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி அவர்கள் எங்கள் யாரையும் பேச விடமாட்டார் என்றும்,எப்போதும் அசிங்க படுத்துவது போன்றே பேசுவார் என்றும் கூறியுள்ளார். இதனால் பேச பயமாக உள்ளது எனவும் கூறியுள்ளார். தற்போது இவர் அளித்த பேட்டி சர்ச்சையை கிளப்பி வருகிறது.