இந்தியாவின் பணக்கார பாடகி ஸ்ரேயா கோஷல் இல்லை… 200 கோடி சொத்து கொண்ட இவர் தான்…

0

தமிழ்.ஹிந்தி,பெங்காலி என பல மொழிகளில் பாடி அசத்தி வருபவர் தான் ஸ்ரேயா கோஷல். இவரின் சொத்து மதிப்பு மட்டுமே 180 கோடி முதல் 185 கோடி வரை இருக்கும் என்கின்றனர்.இவரை தான் நாம் இதுவரை இந்தியாவின் பணக்கார பாடகி என நினைத்து வைத்திருந்தோம்.ஆனால் இவர் இந்தியாவின் பணக்கார பாடகி இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் குல்ஷன் குமாரின் மகள் துளசி குமார் அவர்களே இந்தியாவின் பணக்கார பாடகியும்.இவரின் சொத்து மதிப்பு மட்டுமே 200 கோடி மேல் உள்ளதாம்.இவர் 1986 மார்ச் 15 ல் மும்பையில் பிறந்து டெல்லியில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.இவர் இசையின் மீது கொண்ட ஆர்வத்தால் 6 வயதில் இருந்தே இசை கற்று கொண்டு வருகிறாராம்.

2006ம் ஆண்டு பின்னணி பாடகியாக அறிமுகமான இவர் 2009 ஆம் ஆண்டு சொந்த ஆல்பம் சாங் வெளியிட்டார்.இதைத்தொடர்ந்து இவர் ‘சுப் சுப் கே’, ‘ஹம்கோ தீவானா கர் கயே’, ‘அக்சர்’, ‘டாம், டிக் அண்ட் ஹாரி’, ‘ஃபிர் ஹெரா பெரி’, ‘புல் புலையா’, ‘பில்லு பார்பர்’, ‘துல்ஹா மில் கயா’ போன்ற பாடல்களை பாடியுள்ளார்.இவர் 2015 ஆம் ஆண்டு டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஹிதேஷ் ரால்ஹானை திருமணம் செய்தார்.தற்போது இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed