ஏமாற்ற வந்த கூட்டம் இல்லை… பப்ளிக் இண்டெர்ஸ்டோட திரண்ட கூட்டம்… TVK விஜயின் ஆவேசப் பேச்சு…

சினிமாவில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்து வெற்றி கொடி வீசிவந்த தளபதி விஜய் அவர்கள் தற்போது இரு வருடங்களாக அரசியலில் ஈடுபடப்போவதாக தகவல் வெளிவந்திருந்தது.அதேபோலவே தளபதி விஜய் அவர்கள் ஒரு வருடத்திற்கு முன்னதாக TVK என்ற கட்சியை தொடங்கினார்.

சில மாதங்கள் முன் அவரது கட்சி கொடியையும் அறிவித்தார்.விஜய் மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு நல்ல விஷயங்களை செய்து வந்த விஜய் சினிமாவை விட்டுவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடுவதை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.இந்நிலையில் நேற்று TVK முதல் மாநாடு மிக கோலாகலமாக நடைபெற்றது.

அதில் விஜய் அவர்களின் பேச்சு மிகவும் வீரமாகவும் அனைவரையும் அடித்து தாக்குவது போலவும் இருந்தது.முதல் மாநாட்டை விழுப்புரத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்த விஜய் அவர்கள் இதைத்தொடர்ந்து அடுத்த பிரமாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்.விஜயின் வீர பேச்சால் மக்களுக்கு மிக நம்பிக்கை அவர் மீது ஏற்பட்டுள்ளது.இதில் அவர் நான் குடும்பமாகவோ,கூட்டணியாகவோ கொள்ளையடிக்க மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

You may have missed