திகில் நிறைந்த ஆர்ஜே பாலாஜியின் சொர்க்கவாசல்.!! வெறித்தனமாக இருந்த டீசர்…

0

காமடி நடிகராக அறிமுகமாகி அதன் பின் ஹீரோவாக மற்றும் இயக்குனராக தமிழ் சினிமாவில் கலக்கிகொண்டிருப்பவர் தான் ஆர்ஜே.பாலாஜி அவர்கள் .இவரின் இயக்கத்தில் தான் சூர்யாவின் 45 வது படம் வெளிவர போகிறது என்கிற தகவல் வெளி வந்திருந்தது.இதன் பணிகள் வேகமாக நடந்துகொண்டிருந்த நிலையில் சூர்யா ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில் ஆர்ஜே.பாலாஜி அவர்களின் சொர்க்கவாசல் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்தது . இதில் ஆர்ஜே.பாலாஜி அவர்கள் சென்னை மத்தியசிறையில் கைதியாக காணப்பட்டார் .இதை பார்ப்பதற்கு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையிலே இருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் டீஸர் வெளிவந்துள்ளது இந்த டீஸர் சுமார் 60 வினாடிகளுக்கு மேலே உள்ளது. இதில் சிறையில் நடக்கும் காட்சிகளை தத்ரூபமாக மிக கொடுமையாக காட்டியுள்ளனர்.இதை பார்த்த ரசிகர்களுக்கு இது ஒரு த்ரில்லர் கதை தான் என சிந்திக்க வைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *